பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் சில மாதங்களில் முடித்துவிட்டு வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகப்போகிறது.
இந்த நிலையில் விஜய்- சங்கீதா தம்பதியர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சஞ்சய் கனடாவில் திரைப்பட சம்பந்தமான படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். அதற்கிடையில் அவ்வப்போது குறும்படங்களையும் இயக்கி இயக்குனராக அவதாரம் எடுப்பதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
Also Read: வாரிசுக்கு வந்த நிலமை ஒரு காலமும் லியோவிற்கு வந்துவிடக்கூடாது.. கறாராக இருக்கும் தளபதி
அதேபோல அண்ணனுடன் திவ்யா கனடாவில் பள்ளிப் படித்துக் கொண்டிருக்கிறார். இப்போது திவ்யா தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துள்ள நிலையில் அவருக்கு அங்கு வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் திவ்யாவின் சகோதரரான சஞ்சய்யும் பங்கேற்றார்.
மேடையில் திவ்யாவிற்கு சஞ்சய் மாலை அணிவித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறு பெற்றோருக்கு இணையாக தன்னுடைய அண்ணனிடம் திவ்யா பள்ளி சான்றிதழை கொடுத்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்த கியூட் வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
Also Read: விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. புது குண்டை போட்ட பிரபலம்
கனடாவில் பள்ளி படிப்பை முடித்த திவ்யா மேற்கொண்டு மேல்படிப்பையும் கனடாவிலேயே தான் தொடர போகிறார். சஞ்சய் மற்றும் திவ்யா இருவரும் தன்னுடைய தந்தை விஜய் உடன் ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடலிலும், அதேபோல் தெறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலிலும் திவ்யா நடித்திருப்பார்.
இதன் பிறகு இவர்கள் இருவரும் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. சஞ்சய் தன்னுடைய தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக வேண்டும் என்ற பாதையை தேர்ந்தெடுத்து விட்டார். திவ்யாவாவது நடிக்க வருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
தங்கையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சஞ்சய்

Also Read: விஜய்க்கு முன்னரே 200 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ.. அதுக்கு மேலையும் வாங்க போகும் லியோ