புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஏஆர் ரகுமான் போல் என்னால் அசிங்கப்பட முடியாது.. லோகேஷுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்

AR Rahman, Vijay: இசைப்புயல் ஏஆர் ரகுமான் மக்கள் மனதில் மிகப்பெரிய உயரத்தில் இருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று அவரது பெயரை மொத்தமாக மாற்றி விட்டது. அதாவது மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏஆர் ரகுமானின் இசைகச்சேரி ஒன்றை சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்க 50000 தொடங்கி 1000 ரூபாய் வரை ஒவ்வொரு பிரிவிற்கும் டிக்கெட் வசூலிக்கப்பட்டது. மேலும் அன்று நடக்கும் இடத்திற்கு வருவதற்கு முன்பே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு டிக்கெட் வாங்கியும் மக்களால் அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை.

Also Read : நானே பலியாடாக ஆகிறேன், மலை போல் கொட்டிய காசு.. ஆவேசத்தில் ஏஆர் ரகுமான் எடுத்த முடிவு

இதற்கு காரணம் சரியான நிர்வாக ஒருங்கிணைப்பு இல்லை. பல்லாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாதது மட்டுமின்றி கூட்ட நெரிசலில் பல அசம்பாவிதங்கள் அங்கு நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். அதன் பிறகு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனத்தினர் மன்னிப்பு கேட்டு இருந்தனர்.

ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் இந்த இணையதளத்தில் தங்களது டிக்கெட் நகலை அனுப்பிய பின் பணம் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறியிருந்தார். அதேபோல் இந்நிறுவனம் இப்போது டிக்கெட் நகலை சரி பார்த்து வருகிறார்களாம்.

Also Read : வெட்கத்தை விட்டு தேடி போய் வாய்ப்பு கேட்ட பிரியாமணி.. கடைசிவரை நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்யின் தம்பி

இந்த சூழலில் விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியையும் ACTC நிறுவனம் தான் ஏற்பாடு செய்வதாக இருந்தது. இப்போது மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக ஏ ஆர் ரகுமான் போல் தன்னால் அசிங்கப்பட முடியாது என தளபதி அதிரடி காட்டியுள்ளார். அதன்படி லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் லலித்திடம் வேறு நிறுவனத்தை மாற்ற சொல்லி இருக்கிறாராம்.

உடனடியாக லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை வேறு நிறுவனத்திற்கு கொடுக்க படக்குழு முடிவு செய்திருக்கிறாராம். மேலும் வருகின்ற செப்டம்பர் 31ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஆகையால் இனி பெரிய நிகழ்ச்சிகள் ACTC நிறுவனத்திற்கு கிடைப்பது கடினம் தான்.

Also Read : நான் கூப்பிட்டா தான் அவரு வருவாரா? லியோ ஆடியோ லான்ச்சுக்கு குட்டி கதையை பட்டை தீட்டும் விஜய்.!

Trending News