எந்த நேரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சீமான் சென்று சந்தித்தாரோ.. இன்று வரை அது ஒரு விவாத பொருளாகவே உள்ளது. எத்தனையோ பேர், அது அரசியல் சந்திப்பு அல்ல.. என்று கூறினாலும், மக்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்த நிலையில், இவர்கள் சந்திப்புக்கான உண்மை காரணம் என்று ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சினிமாவை பொறுத்தவரை, ரஜினி தான் விஜயின் நேரடி எதிரி.. அதற்க்கு காரணம் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தான். அவர்கள் படம் வெளியாகும்போது, இருவரின் ரசிகர்கள் ஒரு போட்டி மனப்பான்மையோடு இருப்பது மட்டுமல்லாமல், படத்தை ஓட விடாமல் செய்ய.. பல வேலைகளை பார்த்து வருகிறார்கள். அது மட்டுமின்றி ரஜினிக்கு உள்ளுக்குள் நிச்சயம் புகைச்சல் இருக்கு.
விஜய்யோட நேரடி எதிரி ரஜினி தான்..
ஏன் என்றால், தான் செய்த முடிவு ஒன்று, அதை பின்பற்ற முடியாமல் போனது.. தன்னை பார்த்து வளர்ந்த பைய்யன் அதை முன் நின்று செய்கிறார் என்றால், ஒரு சாதாரண மனிதராக இருக்கும் அனைவருக்குமே ஒரு சின்ன பொறாமை, புகைச்சல் போன்ற உணர்வுகள் நிச்சயம் இருக்கும். இதை சீமான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
வேட்டையன் படம் சூப்பராக உள்ளது என்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதான் நேரம் என்று ரஜினியும் சீமானை அழைத்து பேசியுள்ளார்.
சீமானுக்கு இந்த முறை பெரிய அளவில் வாக்கு இல்லை என்றாலும், இனி 8 சதவீததுக்கு மேல ஓட்டு வேண்டும். அதே நேரத்தில், விஜய்க்கு செல்லும் ஓட்டு, சிறிய அளவில் குறைய வேண்டும்.
அதற்கான சந்திப்புதான் இது.. அதனால், விரைவில் சினிமா போல அரசியலில் விஜய்க்கு எதிரியாக ரஜினி வருவார் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
இவர் கூறும் தகவல்களில் 80 சதவீதம் சரியாக இருப்பதால், ரஜினி ரசிகர்களும் சூப்பர்ஸ்டாரின் அரசியலில் செகண்ட் இன்னிங்க்ஸை எதிர்நோக்கி வருகின்றனர். இருந்தாலும், சீமானுக்கு ஆதரவு கொடுப்பாரா ரஜினி என்ற கேள்வியும் உள்ளது.