செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேப்டன் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகிகள்.. இறந்த பிறகு நீலி கண்ணீர் வடித்த விஜய்

Vijayakanth: இருக்கும் போது ஒருவருடைய அருமை தெரியாது என்பது கேப்டன் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. அவரை வெறும் ட்ரோல் மெட்டீரியலாக மட்டுமே சித்தரித்த ஊடகங்கள் இப்போது அவர் செய்த நல்ல விஷயங்களை வெளியிட்டு வருகின்றன.

அதில் கேப்டன் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகிகள் பற்றி சொல்லியாக வேண்டும். அதாவது விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்லாமல் கட்சி ஆரம்பித்த போதும் தனக்கு நெருக்கமானவர்களை ஒரு நல்ல அந்தஸ்தில் வைத்திருந்தார்.

ஆனால் அவருடைய நண்பர்களே கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவி அவர் முதுகில் குத்தி இருக்கிறார்கள். இது விஜயகாந்துக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இயல்பாகவே அவர் தன்னுடைய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாராம்.

Also read: விஜயகாந்த் மரணத்தில் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை.. கண்டுக்காத நன்றி கெட்ட நடிகர் சங்கம்

மேலும் சுயநலத்திற்காக கேப்டன் மூலமாக வளர்ந்த பலரும் அவரை காயப்படுத்தி இருக்கின்றனர். இது பற்றிய செய்திகள் இப்போது வைரலாகி வருகிறது. அதில் விஜய் குறித்த விமர்சனங்கள் தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் கேப்டனின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விஜய்யை கட்சித் தொண்டர்கள் வெளியே போ என்று கோஷமிட்டதை நாம் பார்த்தோம்.

அதேபோல் இன்னும் சில அவமானங்களும் நடந்தது. அதை தொடர்ந்து விஜய் கேப்டனை சந்திக்க கடந்த ஒரு வருடமாக முயற்சித்தார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியானது. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லையாம்.

சூப்பர் ஸ்டார் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் விஜயகாந்தை வீட்டில் வந்து சந்தித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது விஜய்க்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்க வேண்டும். இது அத்தனையும் சுத்த பொய். விஜய் நினைத்திருந்தால் கேப்டனை சந்தித்திருக்கலாம். ஆனால் அவர் இறந்த பிறகு நீலி கண்ணீர் வடித்தது இப்போது விமர்சனம் ஆகி உள்ளது.

Also read: கேப்டன் இறுதிச் சடங்குல கலந்துக்க துப்பில்ல, வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டமா.? கிழித்தெறிந்த ப்ளூ சட்டை

Trending News