Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது தவிர அரசியலிலும் முழுவீச்சாக செயல்பட இருக்கிறார்.
இந்த சூழலில் விஜய் பட அப்பா ஒருவர் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார். அதுவும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக இப்போது அவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.
Also Read : சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் இளம் ஹீரோ.. விஜய், சிவகார்த்திகேயன் எல்லாம் பின்னாடி போங்கப்பா!
அதாவது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் இப்போது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சரத்குமார் அடம் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் பிறகு எதார்த்தத்தை புரிந்து கொண்டு கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.
அதன்படி விஜய்க்கு அப்பாவாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். அதை காட்டிலும் சரத்குமாருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த படம் தான் போர் தொழில். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு பலரையும் பிரமிக்க வைக்கும்படி இருந்தது.
Also Read : லியோவை ஓரங்கட்டிய ஜெயிலர்.. எகிறிய பிசினஸால் தூக்கத்தை தொலைத்த விஜய்
அதேபோல் அடுத்தடுத்தும் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் சரத்குமாரை நாடி வருகிறதாம். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் பிளாக் சூப்பர் ஸ்டார் படத்திலும் சரத்குமார் நடிக்கிறார். இதைத்தொடர்ந்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன் முரளியின் மகன் ஆகாஷ் முரளியை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகை அதிதி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திலும் சரத்குமாருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் சரத்குமார்.
Also Read : சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை