வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்ட தொடங்கிய தளபதி 67.. லோகேஷ் மேல் அவ்ளோ நம்பிக்கை

விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மற்ற படங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே உள்ளது. காரணம் என்னவென்றால் லோகேஷின் முந்தைய படங்கள் எடுத்து பார்த்தால் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்துள்ளார்.

தளபதி 67 படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற சஸ்பென்சை கூட தற்போது தயாரிப்பு நிறுவனம் உடைத்துள்ளது. ஏனென்றால் நேற்றிலிருந்தே படத்தில் நடிக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

Also Read : 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ஜோடி.. தளபதி 67 அப்டேட்டால் குதூகலமான சோசியல் மீடியா

இதில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். பொதுவாக படத்தின் டிரைலர் வெளியான பின்பு தான் சாட்டிலைட் மற்றும் ஓடிடி போன்ற நிறுவனங்கள் படத்தை வாங்கும். லோகேஷ் மீது உள்ள முழு நம்பிக்கையில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாவதற்கு முன்பே தளபதி 67 படம் வியாபாரம் ஆகியுள்ளது.

அதாவது தளபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் சாட்டிலைட் உரிமத்தை சன் நெட்வொர்க் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. மேலும் இப்போதே 250 இல் இருந்து 300 கோடிக்கு மேல் ப்ரீ பிசினஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : பணம் சம்பாதிக்க குறுக்கு புத்தியில் யோசிக்கும் விஜய்.. தளபதி 67 மொத்த லாபத்தின் ஷேர் இதுதான்

இதுவரை தளபதி விஜய்யின் படத்திற்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்ததில்லை. மேலும் தளபதி 67 படத்துடன் மோத உள்ள ஏகே 62 படத்தையும் நெட்பிளிக்ஸ் தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுமே வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மோதிக்கொள்ள இருக்கிறது.

மேலும் தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. நாளை தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது. இதற்காக விஜய் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Also Read : அதரிப்புதிரியாக வெளியான தளபதி 67-ல் நடிக்கும் டாப் ஸ்டார்கள்.. மாஸாக வெளியிட்ட லோகேஷ்

Trending News