ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரோகினிடம் உண்மையை உளறிய விஜயாவின் தோழி பார்வதி.. சிட்டி கொடுத்த டார்ச்சரால் திருடப் போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணிக்கு எப்படி மாமியார் சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கினார் என்ற விஷயம் தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார். அதனால் இந்த விஷயத்தை கண்டுபிடித்தாக வேண்டும் என்று வித்யாவிடம் புலம்புகிறார். அந்த நேரத்தில் சிட்டி, ரோகினிக்கு போன் பண்ணி நான் கேட்ட பணம் என்ன ஆச்சு ஏன் இன்னும் வந்து கொடுக்கவில்லை என்று மிரட்டுகிறார்.

உடனே ரோகினி, நானும் பணத்திற்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு சிட்டி நீங்க லேட் பண்ண பண்ண PAக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயமுறுத்தி பேசுகிறார். உடனே ரோகிணி கூடிய சீக்கிரத்தில் வந்து தருகிறேன் என்று சொல்லிவிடுகிறார். அப்பொழுது சத்யா வீடியோ வெளிய வந்துவிட்டால் முத்து மற்றும் மீனா வீட்டை விட்டு வெளியே போய் விடுவார்கள்.

அத்துடன் இனி PAவும் தொந்தரவு பண்ண மாட்டார் என்று சந்தோசப்பட்டேன். ஆனால் எல்லாம் நினைத்ததை விட தலைகீழாக மாறிவிட்டது என்று வித்யாவிடம் சொல்கிறார். அடுத்ததாக விஜயாவிடம் மன்னிப்பு கேட்டு நன்றி சொல்வதற்காக மீனாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்வதி வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். இவர்களைப் பார்த்து விஜயா கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தி பேசுகிறார்.

ஆனால் முத்து கூடவே இருந்ததால் விஜயாவால் ரொம்ப ஆட்டம் ஆட முடியாமல் அடக்கி வாசித்தார். பின்பு மீனாவின் குடும்பத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு முத்து மற்றும் மீனா விஜயாவை வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள். ஆனால் விஜயா வரமாட்டேன் என்று வறட்டு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதனால் எப்படியாவது அம்மாவை வீட்டிற்கு கூட்டிட்டு வரணும் என்று முத்து, அம்மா வரவில்லை என்றால் அப்பா கிராமத்துக்கே போய்விடுவாயாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று சும்மா டிராமா பண்ணினார். இதை கேட்டு பயந்து போன விஜயா உடனே வீட்டுக்கு கிளம்பி விட்டார். வீட்டுக்கு அம்மா வருகிறார் என்று தெரிந்ததும் முத்து, மீனா மூலம் ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வர வைத்து விட்டார்.

பிறகு அனைவரும் விஜயாவிடம் கேசை வாபஸ் வாங்குவதற்கு ரொம்ப சந்தோசம் என்று சொல்கிறார்கள். ஆனால் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தீங்க திடீரென்று எப்படி வாபஸ் வாங்கினீங்க என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு விஜயா, என் வீட்டுக்காரர் வந்து என்னிடம் பேசிட்டு போன பிறகு அவர் சொல்வதைக் கேட்கணும் என்று தோணுச்சு. அதனால்தான் சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கி விட்டேன் என்று சொல்கிறார்.

இதற்கிடையில் விஜயா, லாயரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணம் வாங்கி தான் கேசை வாபஸ் வாங்கி இருக்கிறார் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. ஆனால் முத்து, விஜயாவிடம் நீங்கள் ஆரம்பத்திலேயே வாபஸ் வாங்கி விடுவதாக சொல்லி இருந்தால் தேவை இல்லாமல் நான் லாயருக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

உடனே விஜயா, என்னது இந்த லாயர் 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிட்டு நமக்கு வெறும் 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து கேசை முடித்து விட்டார் என்று பீல் பண்ணி புலம்புகிறார். அடுத்ததாக மாமியார் காரணமில்லாமல் கொடுத்த கேசை திருப்பி வாங்கிருக்க மாட்டார். இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ரோகினி பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி ரோகினி, விஜயாவின் தோழி பார்வதியிடம் பேசினால் எல்லா உண்மையும் கண்டுபிடித்துவிடலாம் என்று பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் பார்வதியிடம் நைசாக பேசி விஜயா 2 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிட்டு தான் கேசை வாபஸ் வாங்கி இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொண்டார். அந்த வகையில் தற்போது மாமியாரிடம் இருக்கும் பணம் யாருக்கும் தெரியவில்லை.

அத்துடன் இரண்டு லட்ச ரூபாய் பணம் இருக்கிறது என்று மாமியாரும் யாரிடமும் சொல்லிட முடியாது. அதனால் இந்த சான்ஸை பயன்படுத்தி சிட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்து விடலாம் என்று விஜயாவின் 2 இலட்ச ரூபாய் பணத்தை ரோகிணி திருடப் போகிறார்.

Trending News