
Vijay : விஜய் இப்போது முழு ஈடுபாடுடன் அரசியலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒருபுறம் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் ஒட்டுமொத்த சினிமாவின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
ஏனென்றால் விஜய் இத்துடன் சினிமா பயணத்தை முடித்துக் கொள்வதால் கடைசி படம் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்தது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ஜனநாயகன்பட ரிலீஸ் தேதி வெளியானது
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதாவது வருகின்ற 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
அடுத்த வருடம் தொடக்கமே தளபதி விஜய்க்கு வெற்றியாக அமைகிறது. அதன் பிறகு 2026 இல் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதிலும் விஜய் தனது தவெக கட்சி சார்பில் போட்டியிட போகிறார்.
இதன் மூலம் முதல் முதலாக அரசியலிலும் களம் காண இருக்கிறார். 2026 நம்ம ஆண்டு தான் என தளபதி திட்டம் போட்டு ஒவ்வொரு செயலிலும் இறங்கி வருகிறார்.
அந்த வகையில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே விஜய் வெற்றி மகுடம் சூட இருக்கிறார். மேலும் ஜனநாயகன் போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.