திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு.. விஜய்யை இம்ப்ரஸ் செய்த 2 பேர், தளபதி 69 அப்டேட்

சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று விஜய் சொன்னாலும் சொன்னார். அவருடைய இறுதி படத்திற்கான எதிர்பார்ப்பு ஓவராகவே இருக்கிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்த படத்தோடு சினிமாவுக்கு டாட்டா காண்பிக்க இருக்கிறார்.

தீவிர அரசியலில் இறங்கப் போகும் விஜய் தன்னுடைய கடைசி படம் காலத்துக்கும் பெயர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அதனாலயே இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதிலும் அவர் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் கிட்டத்தட்ட எட்டு இயக்குனர்களை தேர்வு செய்த அவர் அதிலிருந்து தற்போது இரண்டு பேரை வடிகட்டி இருக்கிறாராம். ஆனால் அதில் தான் மிகப்பெரும் ட்விஸ்ட் இருக்கிறது. ஏற்கனவே வெற்றிமாறன் தான் விஜய்யின் கடைசி பட இயக்குனர் என்ற ஒரு தகவல் காட்டு தீயாக பரவியது.

Also read: உதடு வலிக்க முத்தம், முட்டி தேய டான்ஸ் ஆடிட்டு நேரடியா CM.. விஜய்யை விளாசிய லியோ பிரபலம்

ஆனால் தற்போது இந்த ரேஸில் முதல் இரண்டு இடத்தை பிடித்திருப்பது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்ஜே பாலாஜி இருவர் தான். இவர்கள் இருவர் சொன்ன ஒன் லைன் கதை தளபதிக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அதில் இம்ப்ரஸ் ஆகி தற்போது முழு ஸ்கிரிபையும் தயார் செய்து எடுத்து வரும்படி அவர் உத்தரவிட்டுள்ளாராம்.

அதற்கான வேலையில் தற்போது இருவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதை பார்த்தவுடன் விஜய் இருவரில் ஒருவரை தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த DVV என்டர்டெயின்மென்ட் தயாரிக்க இருக்கிறது.

இப்படி பெத்த கையோடு இணைந்திருக்கும் விஜய் இறுதி படத்தை தரமான சம்பவமாக இறக்கி விட முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படம் என்ற பெருமையை தட்டிச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: திராட்டில் விட்டு கோட்-க்கு போன வெங்கட் பிரபு.. ஒரே கல்லில் ரெண்டு பலாப்பழத்துக்கு பிளான் பண்ணிய சத்திய ஜோதி

Trending News