Leo First Look Poster: லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்த மாதத்துடன் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்ய உள்ளார் லோகேஷ்.
இந்த சூழலில் இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது. ஏற்கனவே லியோ படத்தின் டைட்டில் வீடியோ வெளியான போது விஜய்யின் ஹேர் ஸ்டைல் மற்றும் தோற்றம் வித்தியாசமாக இருந்தது.
இந்நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. இந்த போஸ்டரில் வெறித்தனமான லுக்கில் ரத்தம் தெறிக்க கையில் சுத்தியலுடன் மாஸ் காட்டியுள்ளார் தளபதி. ஹாலிவுட் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் இருக்கிறார்.
மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டுக்கடங்காத நதிகளின் உலகில், அமைதியான நீர் தெய்வீக கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக மாறும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி லியோவின் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக இருக்கிறது.
Also Read : அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்
இந்தப் பாடல் கிட்டத்தட்ட 20 நிமிடம் விஜய் ரசிகர்களை திக்கு முக்காட செய்யும் என்று லோகேஷ் உறுதி அளித்திருக்கிறார். மேலும் விஜய்யின் பிறந்தநாள் இன்று 12 மணியிலிருந்து தொடங்கிய நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதுமட்டுமின்றி இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதன் மூலம் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று முழுக்க தளபதி ரசிகர்கள் இணையத்தில் விஜய்யை கொண்டாடி தீர்க்க காத்திருக்கிறார்கள்.
Also Read : மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்