சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Pradeep: விஜய்யின் பாடல் வரியை டைட்டில் ஆக்கிய பிரதீப்.. அடுத்த 500 கோடி வசூலுக்கு தயாரான கல்பாத்தி

Pradeep Upcoming Movie Title: அறிமுக கதாநாயகர்களாக சினிமாவிற்குள் நுழைந்து இளம் ஹீரோக்களாக நடிக்கும் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முக்கியமாக தவிர்க்க முடியாத ஹீரோவாக பிரதீப் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஆரம்பத்தில் இயக்குனராக நுழைந்த பிரதிப் லவ் டுடே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீரோவாகவும் இடம் பிடித்து விட்டார்.

அந்த வகையில் இப்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதில் இவருடன் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி செட்டி மற்றும் பலர் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டிலேயே படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கும் மும்முரமாக பல ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் பிரதீப் அடுத்த படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். அந்த வகையில் ஓ மை கடவுளே படத்தை எடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிக்க போகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தை பற்றி இயக்குனரிடம் அர்ச்சனா கூறியது என்னவென்றால் டைட்டிலை சும்மா தாறுமாறாக தெறிக்க விடணும். அதற்கேற்ற மாதிரி ஒரு டைட்டிலுடன் ப்ரோமோவை ரெடி பண்ணி வெளியிட வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைட்டில் பிரமோவை வெளியிட்டு விட்டார்.

பிரதீப் அடுத்த படத்திற்கான கூட்டணி

அந்த வகையில் பிரதீப் அடுத்து நடிக்கப் போகும் படத்தின் டைட்டில் என்னவென்றால் டிராகன். அத்துடன் டைட்டிலை வெளியிட்ட இயக்குனர், அர்ச்சனாவிடம் நீங்கள் எதிர்பார்த்தபடி டைட்டில் வந்திருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் டபுள் ஓகே என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தி விட்டார்.

pradeep (1)
pradeep (1)

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கோட் படத்திலிருந்து வெளிவந்த விசில் போடு பாடலில் டிராகன் வேட்டைக்கு தயார் என்ற வரியை டைட்டிலாக வைத்திருக்கிறார் என்று விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் டைட்டில் மற்றும் ப்ரோமோவை வெளியிட்ட வீடியோவில் அஸ்வத், பிரதீப், அர்ச்சனா, மிஸ்கின் மற்றும் பலர் சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாயிருக்கிறது. அத்துடன் படத்தின் சூட்டிங் இன்று ஆரம்பித்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்து பிரதீப்பின் முழு கவனமும் நடிப்பில் மட்டும் தான் இருக்கப் போகிறது.

அந்த வகையில் அடுத்த தலைமுறைக்கான ஹீரோ அந்தஸ்தை கூடிய விரைவில் பிரதீப் பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News