செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மாஸ்டர் படத்தில் அஜித்தை கவர்ந்த விஷயம்.. வலிமை படத்திற்காக விஜய்யிடம் கேட்டு வாங்கிய பொருள்!

சமீபத்தில் தல அஜித் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட பொருள் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அதை வலிமை படத்தில் பயன்படுத்த கேட்டு வாங்கியுள்ளதாக வேகவேகமாக கோலிவுட்டில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவருமே நல்ல நண்பர்கள்தான். இருவருக்குள்ளும் போட்டி உண்டே தவிர பொறாமை கிடையாது. இதை இருவருமே பல மேடைகளில் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் ரசிகர்கள் சண்டை தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மேலும் ஒவ்வொரு விஜய் படம் வெளியானாலும் அஜித் குடும்பத்துடன் பார்ப்பதும், அஜித் படங்களை விஜய் குடும்பத்துடன் பார்ப்பதும் வழக்கமான ஒன்றுதான். இது பல ரசிகர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. விஜய் மற்றும் அஜீத் நெருங்கிய வட்டாரங்களில் மட்டுமே தெரிந்த விஷயம்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் தியேட்டருக்குச் சென்று மாஸ்டர் படத்தை கண்டுகளித்துள்ளனர். அதில் தல அஜித்தும் ஒருவராம். மேலும் மாஸ்டர் படத்தை வெகுவாக பாராட்டியதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய கார் தல அஜித்தை மிகவும் கவர்ந்து விட்டதாகவும் தெரிகிறது.

இதனால் விஜய்யிடம் மாஸ்டர் படத்தில் பயன்படுத்திய அந்தக் காரை வலிமை படத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன் என அஜித் கேட்டு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

master-car-cinemapettai
master-car-cinemapettai

ஆனால் மாஸ்டர் படத்தில் தல அஜித்தின் காதல் கோட்டை படத்தின் கதையைக் கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட நண்பர் அஜித் என தளபதி விஜய் கூறியது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News