வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பத்தல பத்தல போல் சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் நா ரெடி.. சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பாடல்

Actor Vijay: லோகேஷ் கனகராஜ் எந்த அளவுக்கு தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸை உருவாக்கி இருக்கிறாரோ, அதேபோல சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது உலக நாயகன் கூட்டணியில் இவர் இயக்கியிருந்த விக்ரம் படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பல பிரச்சினைகளை சந்தித்தது.

அதாவது ஆளுங்கட்சிக்கு எதிராக சில வரிகள் பாடலில் இருந்ததால் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு குறிப்பிட்ட அந்த வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டது. இப்படி விக்ரம் படத்தின் முதல் பாடலே சர்ச்சைக்குள்ளானதை அடுத்து லியோ படத்தின் முதல் பாடலும் பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது.

Also read: சொதப்பிய நெல்சன், சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. லியோவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் அன்று நா ரெடி என்ற முதல் பாடல் அதிகாரபூர்வமாக வெளியானது. அனிருத் இசையில் விஜய்யின் குரலில் 2000 டான்சர்களுடன் தளபதி போட்ட ஆட்டம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதேசமயம் அந்த பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்றும் சில வரிகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது தற்போது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

இப்படி சர்ச்சைக்குரிய 10 விஷயமும் அப்பாடலில் பக்காவாக இருந்ததால் தற்போது சமூக ஆர்வலர் ஒருவர் விஜய்க்கு எதிராக ஆன்லைனில் புகார் ஒன்று அளித்துள்ளார். கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் தன்னுடைய புகார் மனுவில் லியோ படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Also read: அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

இதனால் அப்பாடலை தடை செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விஷயம் தற்போது பரபரப்பை கிளப்பிய நிலையில் நா ரெடி பாடல் படம் வெளியாகும் போது நீக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி பத்தல பத்தல பாடல் போல் நா ரெடி பாடலும் சர்ச்சையில் சிக்கி இருப்பது படத்திற்கான இலவச ப்ரமோஷனாகவும் மாறி இருக்கிறது.

மேலும் லோகேஷ் இதையெல்லாம் திட்டமிட்டு செய்கிறாரா என்ற ஒரு கேள்வியையும் முன்வைக்கிறது. அந்த வகையில் பாடலே இவ்வளவு சர்ச்சையாக இருக்கும் நிலையில் படத்தில் இன்னும் என்னென்ன மாதிரியான சம்பவங்கள் இருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பையும் லோகேஷ் உருவாக்கி இருக்கிறார்.

Also read: நீ 1000 பேரோட ஆடுனா நான் 1500 பேரோட ஆடுவேன்.. விஜய் உடன் ஏட்டிக்கு போட்டி போடும் நடிகர் 

Trending News