திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பழசை மறந்து அம்மாவை தேடி போன வாரிசு.. ட்ரெண்டாகும் விஜய்யின் போட்டோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் விஜய் அதிக ஆர்வத்துடன் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து அவர் ஒரு புது எனர்ஜியுடன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் குறித்து அவ்வப்போது வெளிவரும் அப்டேட்டுகளும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் ஃபோட்டோ ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்தி கொண்டிருக்கிறது. ஏற்கனவே லியோ படத்திலிருந்து வெளிவரும் போட்டோக்களும், வீடியோக்களும் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. ஆனால் இப்பொழுது வெளியாகி உள்ள இந்த போட்டோ நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் தான்.

Also read: கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் க்யூல தான் நிக்கணும்.. விஜய், சூர்யாவை காக்க வைக்கும் இயக்குனர்

அதாவது விஜய் தன் அம்மா சோபாவுடன் இணைந்து எடுத்திருக்கும் போட்டோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவரின் அம்மா இருக்கையின் மீது அமர்ந்திருக்க விஜய் அவர் காலடியில் உட்கார்ந்திருக்கிறார். மேலும் மகனை பார்த்த சந்தோஷத்தில் அவரின் அம்மா இருப்பது அந்த போட்டோவில் வெளிப்படையாகவே தெரிகிறது.

சமீபகாலமாக அவர் பல பேட்டிகளில் விஜய்யை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று கூறி வந்தார். அந்த வகையில் தற்போது விஜய் தன் அம்மாவை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் சோபா இருவரும் 50 வது திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர்.

Also read: 18 வருடத்திற்கு முன் விஜய்யுடன் லோகேஷ்-க்கு நடிக்க கிடைத்த பட வாய்ப்பு.. தலைகீழாக மாற்றிய இயக்குனர்

அதற்கு வாழ்த்து தெரிவிக்கவே விஜய் அவர்களை தேடி சென்றிருக்கிறார். ஆனால் இந்த போட்டோவில் எஸ்.ஏ சந்திரசேகர் இடம் பெறவில்லை. இது குறித்து சில கேள்விகள் எழுந்தாலும் நீண்ட நாளைக்கு பிறகு விஜய் அம்மாவுடன் இருக்கும் போட்டோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

அம்மா சோபாவுடன் விஜய்

 

vijay-shoba
vijay-shoba

Trending News