வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான்.. திராவிடத்தை ஆட்டம் காண வைக்க வரும் தளபதி

Vijay’s political credit is confirmed ready to register his party: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் அவர்கள் அரசியல் என்கிற ஆடுபுலி ஆட்டத்தில் லாவகமாகவும் நேர்த்தியாகவும் தனது காய்களை நகர்த்தி வெற்றிக்கு வித்திட்டு வருகிறார்.  விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்கிற கேள்வி சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என தமிழக மக்கள் அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி யாரும் நெருங்க முடியாத அளவு தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்து  புகழின் உச்சியில் இருந்த விஜய்யை, சில அரசியல் தலைவர்கள் அவரது படங்களை வெளியிட முடியாமல் பிரச்சனை செய்ததில் இருந்து ஆரம்பித்தது விஜய்யின் அரசியல் ஆட்டம்.

2009 ஆம் ஆண்டு தனது ரசிகர்களை கொண்டு விஜய் மக்கள் மன்றத்தை ஆரம்பித்தார் தளபதி. தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்திற்கு என “உழைத்திரு உயர்ந்திரு” என்ற வாசகங்களுடன் விஜய்யின் புகைப்படத்தையும் இணைத்து கொடி ஒன்றை அறிமுகம் செய்தார்.

தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உண்ணாவிரதம் இருந்து அண்ணா ஹசாரே சந்திப்பது, ராகுல் காந்தியை சந்திப்பது என கடந்த பல வருடங்களாக ரகசியமான நகர்வுகளை அரசியலில் மேற்கொண்டு இருந்தார். சமீப காலமாக அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் வண்ணம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து தொகுதி வாரியாக நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

Also read: பத்திரத்தோடு விஜய் போட்ட கட்டளை.! ஜெயலலிதா பாணியில் சட்ட விரோதமாய் செய்த வேலை

மாணவர்களுக்கு உதவுவது, நூலகம் அமைப்பது, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வது,  என்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார் அரசியல் கட்சி எல்லா இருப்பது போல் மகளிர் அணி மீனவ அணி  இலவச சட்ட உதவி மையம் என அக்மார்க் அரசியல்வாதியாக தன் கட்சியை பலப்படுத்தினார் விஜய்.

தற்போது வந்த தகவலின்படி பிப்ரவரி முதல் வாரத்தில் தனது கட்சியின் பெயரான தமிழக முன்னேற்ற கழகம் மற்றும் கொடி சின்னம் ஆகியவற்றை பதிவு செய்து தீவிர அரசியலில் இறங்க உள்ளதாக நம்பத் தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற கொடியுடன், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் 2026 இல் வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் களம் காண உள்ளனர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள். தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனி பெரும்பான்மையுடன் உதயமாக உள்ளது தளபதி விஜய்யின் தமிழக முன்னேற்ற கழகம் .

Also read: ரஜினியை நம்புறது வேஸ்ட்.. விஜய்யின் அரசியல் என்ட்ரியால் முக்கிய நடிகருக்கு வலை வீசும் ஆளும் கட்சி

Trending News