வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் பட சைக்கோ நடிகருக்கு வந்த சிக்கல்.. அதிசய நோயினால் திக்குமுக்காடி அதிர்ச்சியில் உறைந்த படக்குழு

Vijay Movie Actor: சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் பல நடிகர்களை நடிக்க வைத்து மல்டி ஸ்டார் படமாக ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் சில நடிகர்களின் கேரக்டரை பார்க்கும் பொழுது என்ன இந்த மாதிரி எல்லாம் இவர் நடித்திருக்கிறார். பார்க்கவே சைக்கோ மாதிரி இருக்கு என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தற்போது ஹீரோவாக அவருடைய பயணத்தை அடுத்த லெவலுக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை இதுவரை பல படங்களில் கொரியோகிராபராக இருந்த சாண்டி மாஸ்டர் தான். இவர் முதன் முதலில் கதாபாத்திரம் ரோலில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்ற படம் லியோ. இதில் நெகட்டிவ் ரோலாகவும், சைக்கோ மாதிரியான கேரக்டரையும் கொடுத்திருப்பார்.

அப்படிப்பட்ட இவர் முதன் முதலில் ஹீரோவாக கிப்ட் என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நேரம் மற்றும் பிரேமம் படங்களை எடுத்து வெற்றியை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் கிப்ட் படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார்.

Also read: அஜித்தை இயக்கிய 5 இயக்குனர்களை கமுக்கமாக தூக்கிய விஜய்.. 2 பேருக்கும் சரிசமமாக வந்த ஹிட் படங்கள்

இதற்கு இடையில் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இவருக்கு ஒரு அதிசய நோய் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதுவும் எப்படி என்றால் ஒரே காட்சியை கிட்டத்தட்ட மூன்று நாட்களில் எடுக்கும் அளவிற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறதாம். இதை கவனித்த மொத்த படக்குழுவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி திண்டாடி வருகிறார்கள்.

அதாவது அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை இவரே கூறியிருக்கிறார். அதாவது எனக்கு புதிதாக இந்த நோய் இருக்கிறது. இதனால் யாருக்கும் பாரமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் படத்தை முழுவதுமாக என்னால் எடுக்க கவனம் செலுத்த முடியாது.

நான் சினிமா விட்டேன் விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் என்னுடைய பாடல்கள், வீடியோக்கள் மற்றும் குறும்படங்களை ஓடிடி மூலம் கொடுத்துக் கொண்டே வருவேன் என்று கூறியிருக்கிறார். இதனால் கிப்ட் படத்தின் சூட்டிங் அடுத்த லெவலுக்கு எப்படி போகும் என்பது தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.  எடுத்து வைத்த முதல் படிக்கட்டிலேயே இப்படி ஒரு அடி விழுந்து விட்டதே என்று பெருங்குழப்பத்தில் தவித்து வருகிறார்.

Also read: ஹீரோக்களை ஓரம்கட்டிய சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Trending News