சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மற்ற ஆர்டிஸ்ட்டுக்காக விஜய் செய்யும் தியாகம்.. காஷ்மீரில் திரிஷா மூட்டை முடிச்சு கட்டியதன் பின்னணி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்  மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் லியோ. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பானது அதிக அளவில் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தின் ஷூட்டிங் ஆனது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்பொழுது காஷ்மீரில்  படப்பிடிப்பானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கிருந்து த்ரிஷா மூட்டை முடிச்சை கட்டியுள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான்,அர்ஜுன்உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. மேலும் லியோ படத்தின் ஷூட்டிங் ஆனது சென்னையில் தொடங்கிய நிலையில் கொடைக்கானலில் படப்பிடிப்பானது நிறைவடைந்துள்ளது. 

Also Read : பயங்கர திட்டத்தோடு உருவாகும் தளபதி 69.. பல மடங்கு லாபத்திற்காக பிளான் போடும் விஜய்

அதனை அடுத்து படக்குழுவினர் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். தற்பொழுது காஷ்மீரில் கடும் குளிர் ஆனது வாட்டி வதக்கும் நிலையிலும் படப்பிடிப்பானது படு பிஸியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரிஷா கடும் குளிர் காரணமாக  மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு டெல்லி வந்துவிட்டார். 

இதனால் படப்பிடிப்பானது தாமதமான நிலையில் விஜய் ஒரு வேண்டுகோளை த்ரிஷாவிடம் முன் வைத்துள்ளார். இந்தப் படத்திற்காக பணிபுரியும் மற்ற ஆர்ட்டிஸ்ட்டுக்காக விஜய் இந்த செயலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரிஷா-விடம் படத்தில் வரும் உங்கள் போர்ஷனை மட்டும் நீங்கள் நடித்துக் கொடுத்தால் போதும் என்று விஜய் கூறியுள்ளார். 

Also Read : விஜய்க்கு ஒரு நியாயம், அஜித்துக்கு ஒரு நியாயமா?. ஏகே 62 படத்திற்கு மீண்டும் உருவாகும் பிரச்சனை

ஏனென்றால் படத்தில் பணி புரியும் டான்ஸ் மாஸ்டர் மற்றும் ஸ்டெண்ட் மாஸ்டர் போன்ற மற்ற ஆர்டிஸ்ட்கள் மற்ற படங்களில் ரொம்ப பிஸியாக இருக்கிறார்களாம். மேலும் இவர்கள் இந்த ஒரு படம் மட்டுமல்லாமல் பல படங்களில் கமிட் ஆகி பணிபுரிந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாகும் படங்களில் ரொம்ப பிஸியாக வேலை செய்து வருகின்றனர். 

இதனால் அவர்களுக்கு ஏற்றார் போல லோகேஷ் கனகராஜ் கால் சீட் கொடுத்து விஜய் பெரிய தியாகத்தினையே செய்துள்ளார். இந்நிலையில் அவர்களின் நிலைமையை விஜய், த்ரிஷாவிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு டெல்லி சென்ற திரிஷா அடுத்த இரு தினங்களிலேயே காஷ்மீர் வந்துள்ளார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் விஜய் அவர்கள்தான் என்று அவரை புகழ்ந்து பேசி வருகின்றனர். இவை சினிமா வட்டாரத்தில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.

Also Read : விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி.. லியோவுக்கு போட்டியாக இறங்கும் பிரம்மாண்ட படம்

Trending News