திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு சம்பளம் 100 கோடி.. அவரை தூக்கி விட்ட இயக்குனரோ தெருக்கோடி

தளபதி விஜயின் தற்போது மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜயின் அந்தஸ்து இப்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரணமாக விஜய் தற்போது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் இவரை உருவாக்கிய இயக்குனர் ஒருவர் தற்போது பண வசதி இல்லாமல் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறார்.

Also Read : வெளிப்படையாக விஜய்க்கு எதிராக களத்தில் இறங்கிய அஜித்.. இயக்குனரின் அனுமதி இல்லாமல் செய்த வேலை

அதாவது ஒரு காலகட்டத்தில் விஜய்க்கு கை கொடுத்தது காதல் படங்கள் தான். அந்த வகையில் இவரின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது லவ் டுடே. சமீபத்தில் கூட இதே தலைப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜயின் லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது திரை வாழ்கையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தார். லவ் டுடே படத்திற்கு பிறகு அப்படத்தின் இயக்குனர் பாலசேகரன் விஜய்க்கு கதை சொல்ல பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமல் போனது.

Also Read : விஜய் கொடுத்த தரமான 5 லவ் ஹிட்ஸ்.. காதலுக்காக எதுவும் செய்யலாம் என இளசுகளை தூண்டிய படங்கள்

பாலசேகரன் அதன் பிறகு சில படங்களை இயக்கி இருந்தார். ஆனால் அவையெல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை. இப்போது விஜய் மாஸ் ஹீரோவாக கோடியில் புரளுவதற்கு அப்போது பாலசேகரன் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஆனால் பாலசேகரன் கஷ்டப்பட்டு வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த விஷயம் விஜய் காதுக்கு சென்றால் கண்டிப்பாக உதவுவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் பாலசேகனுக்கு லவ் டுடே தலைப்பை தந்ததற்காக தனது நன்றியை கூறியிருந்தார்.

Also Read : கெத்து காட்ட நினைத்து 40 பேரிடம் செம்ம அடிவாங்கிய விஜய்.. அவரே கூறிய உண்மை சம்பவம்

Trending News