தமிழகத்தில் இரண்டு கட்சிகள்தான் இப்போதைக்கு தங்களை பெரிய கட்சிகளாக காட்டிக் கொள்கின்றனர். அதில் ஒரு கட்சி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ரெண்டுபட்டு கிடக்கின்றனர். இதனால் ஆளுங்கட்சிக்கு அடுத்ததாக 2வது பெரிய கட்சி நான்தான் என்கின்ற அளவுக்கு விஜய் முக்கியமான அரசியல் அறிவிப்பை தற்போது வெளியிட்டு தரமான சம்பவத்தை நிகழ்த்த காத்திருக்கிறார்.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியலில் அடுத்த ஆட்டம் விஜய் உடையது தான் என தெரிகிறது. அந்த அளவிற்கு விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு 234 தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் களம் காண வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக விஜய்யின் சொல்லுக்கு இணங்க புஸ்ஸி ஆனந்த் முதல் முதலாக அரசியல் சார்ந்த அறிவிப்பை வெளியிட்டு தளபதி ரசிகர்களை ஆரவாரப்படுத்தி இருக்கிறார்.
Also Read: புருஷனை அறிமுகப்படுத்தாமல் கர்ப்பிணியான விஜய் பட நடிகை.. பிடிச்சாலும் புளியம் கொம்பு
ஏற்கனவே கடந்த ஊராட்சி தேர்தலில் தனது கொடியையும் பெயரையும் விஜய் மக்கள் மன்றத்தினர் பயன்படுத்தி கொள்ளலாம் என விஜய் தெரிவித்து, தன்னுடைய அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவங்கினார். அந்த உள்ளாட்சி தேர்தலில் நிறைய பேர் வென்றனர். அவர்களை எல்லாம் நேரில் அழைத்து விஜய் பாராட்டினார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் தொகுதி வாரியாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்தையும் துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் முடிவு கடந்த மாதம் வெளியானதால், இதில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து அவர்களுக்கு சான்றுதலும் ஊக்கத்தொகையும் வழங்க திட்டமிட்டு இருந்தார்கள்.
Also Read: எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்
அந்த வகையில் வரும் ஜூன் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் வெற்றி பெற்ற மாணவிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் நடைபெறப் போகும் இந்த நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகி, அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகிறது. இதில் விஜய்யும் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல விஜய் மக்கள் மன்றத்தில் மீனவர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட 19 அணிகள் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்கை கூட விட்டு விட கூடாது என விஜய், பல தரப்பட்ட மக்களின் மனதையும் கவர படிப்படியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் இப்போது நீலாங்கரையில் நடக்கப் போகும் இந்த நிகழ்ச்சியும். இனிவரும் நாட்களில் விஜய் வெளிப்படையாகவே அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகப் போவதை நாம் கண்கூடாக பார்க்க போகிறோம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் தரப்பு
