வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக வருவாரா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர் இயக்குனரக விரும்பம் தெரிவித்து, அதற்காக முயற்சித்து வருகிறார்.

தன் தந்தை பிரபல இயக்குனர் என்பதால், தன் மீது விழுந்த வாரிசு நடிகர் என்பது தன் மகனுக்கு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நடிகர் விஜய், அவரது தன் சொந்த முயற்சிலேயே அவரை வாய்ப்பு தேடும் படி கூறியதாகத் தகவல் வெளியானது.

அதன் பின், லைகா ஜேசன் சஞ்சய்க்கு முதல் படத்தை இயக்க வாய்ப்பை லைகா நிறுவனம் கொடுத்தது. இதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்ட ஜேசன் சஞ்சய், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பின், கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

விஜயின் போக்கிரி படத்தில் வசந்த முல்லை பாட்டிலும், வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்க மாட்ட பாடலிலும் வந்து நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்த ஜேசன் சஞ்சய் குறும்படங்களும் இயக்கி கவனம் பெற்றார்.

விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் & இசையமைப்பாளர்

ஆனால், இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகும் நிலையில், இப்படத்தின் காஸ்டிங், தொழில்நுட்ப கலைஞர்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏன் இப்படம் தாமதம் ஆகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்த நிலையில் அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் இப்படத்திற்கு இசையமைக்க முடியாத சூழலில் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே விஜய்யின் ரசிகரும் அவரது வாரிசு படத்துக்கு இசையமைத்தவருமான தமன் தான் ஜேசன் சஞ்சயின் முதல் படத்துக்கு இசையமைக்கிறார் எனத் தகவல் வெளியாகிறது.

வரும் டிசம்பரில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு, ஜனவரியில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் துருவ் விக்ரம், அதர்வா, சந்தீப்கிசன் ஆகிய மூன்று பேர் நடிக்ககலாம் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன் படக்குழு திரைக்கதையில் பிஸியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

Trending News