Actor Vijay : கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னையையே புரட்டி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். சென்னை வாசிகளின் வாழ்வாதாரமே சுத்தமாக முடக்கப்பட்டது. பெரிய நட்சத்திரங்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை என்ன செய்வதென்று தெரியாமல் திக்கு முக்காடி இருந்தனர்.
இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் முதல் ஆளாக வந்து 10 லட்சம் நிதி உதவி செய்திருந்தனர். இதை அடுத்து இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பங்குக்கு ஒரு லட்சம் தொகையை கொடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் 48 மணி நேரம் கழித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த சூழலில் அவர்களுக்கு உணவு, தண்ணீர் என அடிப்படை வசதியே இல்லாமல் இருந்த வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியில் வந்த வண்ணம் இருக்கிறது.
Also Read : விஜய்யின் தலைக்கணக்கத்துக்கு அஜித் வைக்கப்போகும் ஆப்பு.. ஃபார்முலாவை மாற்றிய ஏகே..!
ஆகையால் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டிருப்பதாக விஜய் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதாவது சினிமாவில் ஒரு உச்ச நடிகராக இருக்கும் விஜய் மிக விரைவில் அரசியலிலும் இறங்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த சூழலில் முதல் ஆளாக வந்து குரல் கொடுக்காமல் காலதாமதமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு தலைவனுக்கு உண்டான தகுதியை இப்போது விஜய் இழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் அவரை விளாசி வருகிறார்கள்.
Also Read : அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்