கள்ளச்சாராயத்தால் பலியான 33 பேர்.. தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய்யின் அறிக்கை

Vijay: தற்போது தமிழகமே பரபரப்பாக இருக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய முன்தினம் இந்த கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. அதில் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் அது மட்டும் இன்றி வயிற்று எரிச்சல், கண் பார்வை மங்கியது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது.

அதை அடுத்து கிட்டத்தட்ட 74 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் முதலாவதாக நான்கு பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து மேலும் சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டதில் தற்போது பலி எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு எல்லா தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம்

மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

vijay
vijay

இந்நிலையில் அரசின் நிர்வாக அலட்சியம் தான் இத்தனை உயிர்கள் பலியானதற்கு காரணம் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இத்தனை உயிர்கள் பலியானது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இதே போன்று கடந்த வருடம் நடந்த சம்பவத்திலிருந்து இன்னும் யாரும் மீளவில்லை. இந்த சூழலில் மீண்டும் ஒரு துயரம் நடந்திருப்பது அரசின் நிர்வாக அலட்சியத்தை காட்டுகிறது.

இனிமேலும் இது போன்ற மரணங்கள் நிகழாதவாறு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை ஆரம்பித்த இவர் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்துள்ளார்.

அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது ஆளும் கட்சியை நேரிடையாக எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். இதன் மூலம் தனக்கு போட்டி யார் என்பதையும் யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறேன் என்பதையும் விஜய் தெளிவாக காண்பித்துள்ளார்.

விஜய்யின் அறிக்கையால் பரபரப்பான அரசியல் களம்

Next Story

- Advertisement -