திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

துணிவை முந்தி ரிலீஸாகும் விஜய்யின் வாரிசு.. யாரும் எதிர்பாராத மொத்த வசூல் விபரம்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் சூட்டிங் முடிய இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.

அதேபோன்று பல மாதங்களாக அஜித் நடித்துக் கொண்டிருக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது. வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தை வாரிசு படத்துக்கு போட்டியாக களம் இறக்க வேண்டும் என்று அஜித் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also read:எல்லா மொழிகளியும் குறிவைக்கும் போனி கபூர்.. தீபாவளியை மறக்கடித்த அஜித்

இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் தற்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் அது கலெக்ஷனுக்கும் சில பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

எட்டு வருடங்களுக்கு முன்பு இவர்களின் வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதில் வீரம், ஜில்லாவை விட நல்ல கலெக்ஷனை பார்த்தது. ஆனால் தற்போது இருக்கும் திரையுலகில் பிசினஸ் வேற லெவலில் இருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் திரைப்படங்கள் 300 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

Also read:அஜித், விஜய் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட மீனா.. பல வருடங்களுக்குப் பின் வருந்திய சம்பவம்

அதேபோன்று அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படமும் 230 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதும் பட்சத்தில் பட வசூல் நிலவரம் எப்படி இருக்கும் என்ற ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஒரே நாளில் இந்த படங்கள் மோதும் பட்சத்தில் துணிவு 250 கோடியும் வாரிசு 350 கோடியும் வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று இரு படங்களும் தனித்தனியாக வெளியாகும் பட்சத்தில் துணிவு 200 கோடியும் வாரிசு 300 கோடியும் வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வசூல் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த செய்தி தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே ஒரு பெரிய சண்டையை மூட்டி விட்டிருக்கிறது.

Also read:வேறு வழியில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்த அஜித்.. தொடர்ந்து இத்தனை படங்களா?

Trending News