Actor Vijay: விஜய் தன்னுடைய கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு தீவிரமாக மக்கள் பணியில் இறங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இது வெறும் வாய்ச்சவடால் தான் என்ற ஒரு பேச்சு அப்போதே கிளம்பியது. ஆனால் நான் சொன்னதை செய்வேன் என்று அவர் தற்போது களமிறங்கியுள்ளார்.
ஏற்கனவே கட்சி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக இவர் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது, வெள்ள நிவாரண பொருட்கள் என ஆச்சரியப்படுத்தி வந்தார். தற்போது ஒரு கட்சியின் தலைவராக அவர் விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
Also read: தென்னிந்திய டாப் 10 ஹீரோக்களின் மொத்த வசூல்.. புஷ்பாவிற்கு ஆப்பு வச்ச மாஸ்டர்
இதன் முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2024 மூலம் 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்துள்ளார்.
மக்கள் பணின்னா இப்படித்தான் இருக்கணும்

அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் அதிகாரம் இல்லாமலேயே மக்கள் பணியை விஜய் தொடங்கி விட்டதாக பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. மேலும் மக்களுக்காக இப்படித்தான் இறங்கி வேலை பார்க்கணும் எனவும் விஜய் ரசிகர்கள் பெருமிதத்தோடு கூறி வருகின்றனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்

தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்துள்ள இந்த திட்டத்தை பார்த்து மற்ற அரசியல் பிரமுகர்களும் ஆடித்தான் போயிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் இந்த கட்சி இன்னும் பல திட்டங்களை கையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குழுவில் பெண் நிர்வாகிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்துள்ளது.
ஆட்டம் காண வைக்கும் விஜய் வெற்றிக் கழகம்

Also read: விஜய்க்கே நோ சொன்னவரை துரத்தும் தயாரிப்பாளர்.. தொடர் ஃப்ளாப்பால் படும் பாடு