ஒரே நாளை குறிவைத்து வர போகும் 3 அப்டேட்டுகள்.. கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை தெறிக்கவிடும் தளபதி

Actor Vijay : தளபதி விஜய்க்கு மற்ற ரசிகர்களை காட்டிலும் சற்று கூடுதல் ரசிகர்கள் உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அதனால் தான் விஜய்யின் படங்கள் வெளிநாட்டு வியாபாரங்களில் கூடுதலாக விற்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் என்பதால் இந்த மாதத்தையே விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க விஜய்யின் பிறந்தநாள் அன்று 3 முக்கிய அப்டேட்டுகள் வெளியாக இருக்கிறது. அதாவது விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : கோடு போட்டா ரோடே போடும் தளபதி.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த விஜய்

இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ அன்று வெளியாக இருக்கிறது. தாறுமாறாக உருவாகி இருக்கும் இந்த வீடியோவிற்கு உலகநாயகன் கமலஹாசன் குரல் கொடுத்துள்ளாராம். ஆகையால் லியோ படமும் லோகேஷன் எல்சியூவில் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது கண்டிப்பாக தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும்.

அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் உருவாகிறது. இதற்கான பூஜையும் அன்றுதான் போடப்படுகிறது. அதுமட்டுமின்றி தளபதி 68 படத்தின் டைட்டிலும் அன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு சினிமா அப்டேட்டுகள் பிறந்தநாளுக்கு வெளியாகிறது.

Also Read : தன்னைவிட அதிக வயதுடைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த 5 படங்கள் .. விஜய் அஜித்துக்கும் இந்த நிலைமைதான்

இது தவிர விஜய்யின் அரசியல் நகர்வு பற்றி முக்கிய செய்தி ஒன்று வர இருக்கிறதாம். மேலும் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகிறதாம். விஜய்யின் அரசியல் ஆலோசகரான கரு பழனியப்பா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பல விஷயங்களை தளபதிக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு ஜூன் 22 நோக்கி பல சஸ்பென்ஸ்கள் நிறைந்து இருக்கிறது. இந்த நாளில் கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை விஜய் ஆட்டம் காட்ட இருக்கிறார். இந்தச் செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் மற்ற நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்