திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விட்டகுறை தொட்டகுறை முடித்துக் கொள்ளும் டைரக்டர்.. தளபதி 69 படத்தை இயக்கும் விஜய் பட வில்லன்

Actor Vijay: விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பின்னணி வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த சூழலில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது தான் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படம் தொடங்க உள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அதாவது தளபதி 68 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விஜய் இடைவெளி எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.

Also Read : அஜித், ரஜினியை மலைபோல் நம்பும் விஜய்.. நீலாங்கரையில் உருட்டிய தளபதி விசுவாசிகள்

ஆனால் அதற்கு முன்னதாகவே தளபதி 69 படத்தை முடித்து விட விஜய் திட்டமிட்டு இருக்கிறாராம். மேலும் அந்த படத்தை விஜய் பட வில்லன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற பல இயக்குனர்கள் நடித்துள்ளனர்.

இதில் ஏற்கனவே விஜய்யை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் யோகன் என்ற படத்தை எடுக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் தடைபட்டு போக அதன் பிறகு விஜய், கௌதம் மேனன் கூட்டணி சேராமலே போய்விட்டது. இப்போது ஒன்றாக ஒரே படத்தில் நடிக்கும் போது மீண்டும் விஜய்க்காக கௌதம் மேனன் என ஒரு கதை கூறியுள்ளார்.

Also Read : ப்ளூ சட்டை, நியூ லுக் என ஆளே மாறிய விஜய்.. பரபரப்பை கிளப்பிய மீட்டிங், வைரலாகும் புகைப்படம்

அந்த கதைக்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்பது போல் தெரிகிறது. அதுமட்டுமின்றி கௌதம் மேனன் இப்போது பல்வேறு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கும்போது அடுத்ததாக விஜய் படத்தை தான்தான் இயக்குவேன் என்று கூறிவருகிறார். ஆகையால் கிட்டத்தட்ட தளபதி 69 படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் என்பது உறுதியாகிவிட்டது.

சமீபகாலமாக இயக்குனராக கௌதம் மேனனின் படங்கள் பெரிய அளவில் போகாத நிலையில் நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த சூழலில் யோகன் படத்தில் விட்ட குறை தொட்ட குறையை முடித்துக் கொள்ள தளபதி 69 படத்தில் கௌதம் மேனன் விஜய் கூட்டணி இறங்க இருக்கிறது.

Also Read : கோமாவில் இருந்த மகன்.. நாசருக்காக தவறாமல் விஜய் கொடுக்கும் சர்ப்ரைஸ்

Trending News