திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதிக்கு செய்யவேண்டியதை செய்து முன்னுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிரபலம் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும், இருவருக்குள்ளும் ஒரு ரகசிய உறவு இருப்பதாகவும் பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இரு குடும்பத்திலும் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமில்லாமல் தற்போது இந்திய அளவில் உள்ள அனைத்து மொழிகளிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார். ஹீரோவாக மட்டும் நடித்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்துகொண்டு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

போதாக்குறைக்கு மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கைவசம் 25 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். அதேபோல் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகையாகி விட்டார்.

vijaysethupathi-aiswarya-rajesh-cinemapettai
vijaysethupathi-aiswarya-rajesh-cinemapettai

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு இருக்கிறதாம். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதிக்கு செய்யவேண்டியதை செய்து இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களும் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்தபோது இருவரது குடும்பத்திலும் மிகப்பெரிய பூகம்பம் வந்ததாகவும், அதுவும் ஏற்கனவே விஜய் சேதுபதி திருமணமானவர் என்பதால் அவரது மனைவிக்கு இந்த விஷயம் ஒரு தெரிந்து விஜய் சேதுபதி மீது சந்தேகப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பேசுவதற்கும் ஒரு எல்லை உண்டு. இலைமறை காயாக சொல்ல வேண்டிய விஷயங்களை இப்படி வெட்ட வெளிச்சமாக கூறினால் எப்படி? என பயில்வான் மீது பல பிரபலங்களும் செம கடுப்பில் உள்ளனர்.

Trending News