புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் சேதுபதி காட்டில் கொட்டும் அடை மழை.. மகாராஜாக்கு மின்னுவதெல்லாம் பொன்னாக மாறிவரும் அதிர்ஷ்டம்

அனபெல் சேதுபதி, காத்து வாக்கில் இரண்டு காதல், டி எஸ் பி என தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் ஒரு பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது. அதன்பின் வதவத வென படங்கள் நடித்தும் ஓடாததால் சினிமா கேரியரே கேள்விக்குறியானது.

அப்போதுதான் தனது 50வது படமான “மகாராஜா” நடித்தார் . இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கினார். மகாராஜா படம் சரியான மாஸ் ஹிட் அடித்து படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அன்றிலிருந்து விஜய் சேதுபதி தொட்டதெல்லாம் பொன்னாக மாறி வருகிறது.

அடுத்தடுத்து பல புது இயக்குனர்களும், பெரிய பெரிய தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதி சேதுபதி கால் சீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர். 25 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், மகாராஜா வெற்றிக்கு பின்னர் 40 கோடிகள் வரை உயர்த்தி விட்டார்.

இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸை தொகுத்து வழங்கிக் வருகிறார். கமலுக்கு நிகரான ஒரு பெரிய நடிகரை தேடி வந்த விஜய் டிவிக்கு விஜய் சேதுபதி கிரீன் சிக்னல் கொடுத்து நிகழ்ச்சியையும் சக்சஸ்ஃபுல்லாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ்காக விஜய் சேதுபதிக்கு சுமார் 60 கோடிகள் வரை விஜய் டிவி சம்பளமாக பேசியுள்ளது. ஆனால் இப்பொழுது நிகழ்ச்சி சக்ஸஸ்புள்ளாக போய்க் கொண்டிருப்பதால் விஜய் டிவி அவருக்கு இன்னும் சில ஆபர்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கிடையே விஜய் சேதுபதி இரண்டு படங்களை கமிட்டாகி நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மிஸ்கின் இயக்கி வரும் ட்ரெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.விடுதலை இரண்டாம் பாகம் இவருக்கு தற்போது ரிலீசாக உள்ளது. எப்படியும் படத்தை வெற்றிமாறன் செதுக்கி இருப்பார். அதனால் இதுவும் ஹிட் ஆகுவதற்கு 100% வாய்ப்பு உள்ளது

Trending News