செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெற்றிமாறனுக்கு டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி.. சூர்யா படத்தில் கைவைத்த கொடுமை

Vetrimaaran – Vijay Sethupathi: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய படங்கள் மற்றும் ஹிந்தி படங்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதுவும் செட் ஆகாததால் மொத்தமாக ரூட்டை மாற்றி வில்லன் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து அடி தூள் கிளப்பி வருகிறார். இவர் இப்படி பிஸியாக இருப்பது வெற்றிமாறனுக்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் ரொம்பவும் கூலாக படப்பிடிப்பு தளங்களில் நடந்து கொள்வார்கள். ஒரு சிலரிடம் படம் பண்ணுவதற்கு நடிகர்கள் பயப்படுவார்கள். இதில் இரண்டாவது ரகம் தான் இயக்குனர் வெற்றிமாறன். தான் நினைத்த காட்சி நினைத்த மாதிரியே வரவேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருந்து, நடிகர்களை பெண்டு நிமிர்த்தி விடுவார்.

Also Read:மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

இதனால்தான் அவருடைய படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைகின்றன. அப்படி சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தின் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் விடுதலை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. நினைத்தது போல் வரவில்லை என்று ஒரு ஸ்கெடியூலையே மீண்டும் படமாக்கி வருகிறார் இயக்குனர்.

படத்தின் முதல் பாகம் ரீச் ஆன சூட்டோடு சூடாக 2 ஆம் பாகத்தை உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான் வெற்றிமாறனின் திட்டம். ஆனால் விடுதலை பார்ட் 2 ஷூட்டிங் முடிந்த பாடில்லை. அதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் சேதுபதி தான். கால்ஷீட் பிரச்சனையால் இவர் படப்பிடிப்பில் இன்னும் கலந்து கொள்ளவே இல்லையாம். இதனால் தான் இப்போது இந்த படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருக்கிறது.

Also Read:பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

படத்தின் கதாநாயகனாக நடித்த சூரி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்து விட்டாராம். இப்போதைக்கு விஜய் சேதுபதியின் போர்ஷன்கள் தான் படமாக்கப்படாமல் இருக்கிறது. அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தாலும், அதற்கேற்றவாறு கால் சீட்டுகளை ஒதுக்கி, இயக்குனர்களை காக்க வைக்காமல் விஜய் சேதுபதி பிளான் பண்ணி இருக்கலாம்.

வெற்றிமாறன் இந்த படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் தான் வாடிவாசல் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் படம் தான் வாடிவாசல். சூர்யா நடிக்கவிருக்கும் இந்த படமும் விடுதலை தாமதமாவதால் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

Also Read:ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

Trending News