வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அந்த கேரக்டரில் விஜய் சேதுபதியா.. கைவிட்டுப்போன புஷ்பா படம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். செம்மரக்கடத்தல் மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் கடா மீசை வைத்துக் கொண்டு தழும்புகளுடன் காவல் அதிகாரியாக நடிக்க இருந்தார். அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பகத் பாசிலுக்கும் முன்னதாக இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானவர் நடிகர் விஜய் சேதுபதி. அப்போது விஜய் சேதுபதி நிறைய படங்களில் கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் பிரச்சனை வந்தது. பின்பு இயக்குனர் சுகுமார் உடன் விஜய் சேதுபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Fahat-Pushpa
Fahat-Pushpa

அப்போதும் விஜய் சேதுபதிக்கு கால்ஷீட் பிரச்சனையால் புஷ்பா படத்தில் நடிக்க விருப்பம் இருந்தும் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். அப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்காக விஜய் சேதுபதி காத்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

அதன்பிறகு இந்த ஆண்டு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படங்களில் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் புஷ்பா படத்தை நழுவ விட்ட வருத்தத்தில் விஜய் சேதுபதி உள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் இதில் விஜய் சேதுபதி நடித்து இருந்தால் அவர் மார்க்கெட் உயர்வதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.

Trending News