புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் சேதுபதிக்கு வெற்றிமாறன் கொடுக்கும் குடைச்சல்.. பரோட்டா மாஸ்டரா வாழும் மகாராஜா

மகாராஜா போல் சுற்றிவரும் விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களை வெளியிடவிருக்கிறார். ஐம்பதாவது படமான மகாராஜா படம் கொடுத்த தெம்பால் குஷி மூடில் இருக்கிறார் மக்கள் செல்வன். இந்த படம் கிட்டத்தட்ட 109 கோடிகள் வரை வசூலித்துக்கொடுத்தது.

ஏற்கனவே இவர் மூன்று படங்கள் நடித்து முடித்து இருக்கிறார் காந்தி டாக்கீஸ். ஏஸ், இடம் பொருள் ஏவல் என அடுத்தடுத்து இவர் நடிப்பில் படங்கள் வெளியே வர இருக்கிறது.நமக்கு பிசினஸ் இருக்கும் பொழுதே பழைய படங்களை வியாபாரம் செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.

பரோட்டா மாஸ்டரா வாழும் மகாராஜா

இப்பொழுது பாண்டிராஜ் இயக்க ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா போடும் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக 30 நாட்கள் திறமை வாய்ந்த பரோட்டா மாஸ்டரை வரவழைத்து ட்ரெயினிங் எடுத்துள்ளார். இப்பொழுது இவரும் கைதேர்ந்த ஒரு பரோட்டா மாஸ்டரா வலம் வருகிறார்.

பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வெற்றி மாறன் தான் கடும் குடைச்சல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி கடும் பிசியில் படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதில் விடுதலை இரண்டாம் பாகமும் அடங்கும்.

வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகம் படத்தில் திருப்தியே அடைய மாட்டுக்கிறார். அதனால் படத்திற்கு கால அவகாசங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. வெற்றிமாறன் எப்பொழுது கூப்பிட்டாலும் விஜய் சேதுபதி போக வேண்டுமாம். அதனால் பாண்டிராஜ் இயக்கும் படம் அந்தரத்தில் தொங்குவது போன்ற நிலைமையில் தான் உள்ளது.

Trending News