தமிழ் சினிமாவில் தனது உழைப்பால் முன்னேறி, தற்போது முன்னணி நடிகராக மாறி இருப்பவர்தான் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அதேபோல் எடுக்கும் ரோலுக்கு ஏற்றவாறு நடித்து, தன்னை நிரூபித்தும் காட்டியுள்ளார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது எதிர்மறை நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, விஜய்சேதுபதியின் நடிப்பிற்கு ஒரு சான்றாகவும் அமைந்தது.
அதுமட்டுமில்லாமல் மக்கள் செல்வன் தற்போது ஒரு ஹிந்தி வெப் தொடரில் நடிக்க உள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு அந்தப் பாலிவுட் வெப் தொடரில் நடிப்பதற்காக வழங்கப்படும் சம்பள விபரம் பற்றிய தகவல் வெளியாகி, திரைத்துறையினரை மிரளவிட்டிருக்கிறது.
அதாவது அமேசான் ப்ரைம் தயாரித்து வரும் இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி வருகின்றனர். அதேபோல் இந்தத் தொடரில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரும், ஹீரோயினாக ராஷி கண்ணாவும் நடித்து வருகின்றனராம்.
இந்தத் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் ஹீரோவாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தை விட அதிகம் என்பது கூடுதல் தகவல். அதாவது இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடிக்கும் ஷாகித் கபூருக்கு சம்பளம் ரூபாய் 40 கோடி என்றும், விஜய்சேதுபதிக்கு 55 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் திரைத்துறையினர் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால் கோலிவுட்டில் ஹீரோவாக நடித்தால் கூட விஜய்சேதுபதிக்கு சம்பளம் ரூபாய் 10 கோடி முதல் 15 கோடி வரைதான் தரப்படுகிறது. ஆனால் ஒரே வெப் தொடரில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதி கோலிவுட்டின் டாப் ஹீரோ விஜயையே சம்பளத்தில் முந்தி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.