விஜய் சேதுபதியின் லைன் அப் இரண்டு வருடங்களுக்கு பிஸியாகவே இருக்கிறது. இதில் வேறு இன்னும் படங்களை கமிட் செய்து தள்ளுகிறார். இப்பொழுது கூட வெப் சீரீஸ் பக்கம் அவரது பார்வை திரும்பி உள்ளது. வெப் சீரீஸ் இயக்கும் ஐடியாவில் கூட இருக்கிறார். ஏற்கனவே காக்கா முட்டை மணிகண்டன் உடன் வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி நடித்து வந்தார்.
சமீபத்தில் அவரது ஐம்பதாவது படமான மகாராஜா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பின் வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் வெளிவந்து ஹிட் ஆனது. இந்த படங்களால் அவரது மார்க்கெட் கொடி கட்டி பறந்தும் கூட வியாபாரமாகாமல் 3 படங்கள் கிடப்பில் கிடக்கிறது
இடம் பொருள் ஏவல்: கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை விஜய் சேதுபதியின் நண்பரான சீனு ராமசாமி இயக்கி வந்தார். ஆனால் இன்று வரை இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் இதில் நடித்திருந்தார்கள்.
எயிஸ்: ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. படம் முடிந்து வருடங்கள் ஆகியது. புதுமுக ஹீரோயின் ருக்மணி மற்றும் யோகி பாபு போன்றவர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ரொம்ப காலமாக இது அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
காந்தி டாக்ஸ்: பெரிய எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தினாலும் இந்த படம் இன்று வரை அலமாரியில் தான் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி உடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ், சித்தார்த் போன்றவர்கள் இதில் நடித்துள்ளனர். இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை