வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

7 வருடங்களாக கிடப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்.. ரிலீஸை உறுதி செய்த இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவும் இருக்கிறார். இந்த பட வேலைகளுக்கு இடையே விஜய் சேதுபதியின் மாமனிதனும் ரிலீஸ் ஆகி வெற்றி கண்டது.

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதியின் படம் ஒன்று கடந்த ஏழு வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு உருவான ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் தான் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பது.

Also Read: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்.. கூட்டணி போட தயாராகும் விஜய் சேதுபதி

‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் எல்லா ப்ரொடக்சன் வேலைகளும் முடிந்தும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்திற்கு பின்னால் வந்த ‘தர்மதுரை’ படம் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டது.

‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் ரிலீஸ் ஆக ரெடியான சமயத்தில் கொரானா ஊரடங்கு காலத்தினால் மீண்டும் தடைபட்டு போனது. அதன் பின்னால் படத்தின் தயாரிப்பாளர்களான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் பண பிரச்சனையால் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

Also Read: பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்.. தமிழினத்தின் தலைவனாக நடிக்க போகும் ஹீரோ!

இயக்குனர் சீனு ராமசாமியும் இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை மற்றும் மாமனிதன் படத்தை இயக்கினார். மாமனிதன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல ரீச் ஆனது.

இந்நிலையில் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி தியேட்டர் ரிலீஸ் செய்ய இருக்கிறார். வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

Also Read: அவசரப்பட்டியே குமாரு.. மேடையில் கெட்ட பழக்கத்தை உளறி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி

 

Trending News