விஜய் சேதுபதி சினிமா ஹீரோக்களில் ஒரு விதமான நியாயமான மனிதர் என்று பெயர் எடுத்தவர். இவர் யார் என்று தெரிவதற்கு முன்பே கிட்டத்தட்ட எட்டு தமிழ் படங்களில் நடித்திருந்தார். அப்படி இந்த துறையில் நிறைய அடிவாங்கி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். இன்று ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார்.
1996ஆம் ஆண்டு லவ் பேர்ட்ஸ் படத்தில் தொடங்கி கார்த்தியின் நான் மகான் அல்ல படம் வரை கிரவுட் ஆர்டிஸ்டாக நிறைய படங்களில் நடித்திருந்தார் அதன்பின் 2010 ஆம் ஆண்டு வரை 10 படங்களில் நடித்தும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு இவருக்கு ஹீரோ என்று அங்கீகாரத்தை கொடுத்த முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று.
அதன்பின் சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் எனத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு ஏறுமுகம் தான். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வர ஆரம்பித்தார். அப்படி கஷ்டப்பட்டு ஜெயித்த இவர் பழக்கவழக்கத்தை மறந்து விடக்கூடாது என நட்பு வட்டாரங்களுக்காக நிறைய படம் பண்ணினார்.
சீனு ராமசாமி தொடங்கி கோகுல், பாலாஜி என நண்பர்களுக்காக தொடர்ந்து படங்கள் நடித்தார். அதன் பின் இவரது கேரியரும் சறுக்க ஆரம்பித்தது. இப்பொழுது இரண்டு படங்கள் கொடுத்த சூப்பர் ஹிட்டால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பழைய பழக்கவழகத்திற்கு இனிமேல் படம் பண்ண போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
மகாராஜா மற்றும் விடுதலை போன்ற மக்கள் விரும்பும் கதை அம்சம் உள்ள படத்தை போல நிறைய படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் முடிவில் இருக்கிறார் அதன் முதல் கட்டமாக இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் அடுத்த ப்ராஜெக்ட்டில் கமிட்டாகி இருக்கிறார்.