திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

456 கோடி வசூல் கொடுத்த மெகாஹிட் இயக்குனருடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. மாஸ்டருக்கு பிறகு பவானி வேறலெவல்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்க்கு மார்க்கெட் உயர்ந்ததோ இல்லையோ விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படம் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது. பவானி கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு தெற்கிலிருந்து வடக்கு வரை தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

அதே சமயத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தில் ராயணம் கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

தற்போது தமிழில் பத்து படங்களில் ஹீரோவாகவும், தெலுங்கில் சில படங்களில் வில்லனாகவும் மேலும் ஹிந்தியில் இரண்டு படங்களும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மேலும் ஹிந்தியில் இருந்து ஒரு பெரிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரேஷி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் அந்தாதூன். தற்போது இந்த படத்தை தமிழில் பிரசாந்த் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்.

அந்தாதுன் ஹிந்தி படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது அடுத்ததாக ஸ்ரீ ராம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளார்களாம். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படம் ஆக மாறியுள்ளது.

vijaysethupathi-cinemapettai-01
vijaysethupathi-cinemapettai-01

போகிற போக்கை பார்த்தால் உலக அளவில் புகழ்பெற்ற தனுசை விரைவில் ஓரங்கட்டி விடுவார் போல விஜய் சேதுபதி. தனுஷ் பல வருடங்களாக இந்தி சினிமாவில் இருந்தாலும் தற்போது வரை வெறும் மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திற்கு பிறகு வெறும் ஒரே மாதத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Trending News