விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்கு முன்னராக இரண்டு ஹீரோக்களிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கோரிக்கை வைத்தாராம் லோகேஷ் கனகராஜ்.
இந்திய சினிமாவுக்கே விடிவெள்ளியாக இருக்குமென இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் கோலாகலமாக வெளியாக உள்ளது. விஜய்யின் முதல் பான்இந்தியா(pan india) திரைப்படம் மாஸ்டர் தான்.
இந்நிலையில் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோக்கள் எனவும், மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் முதல் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் தொடர்ந்து பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரமான பவானி கேரக்டரில் முதன்முதலில் பரிந்துரை செய்யப்பட்டவர் நடிகர் மாதவன் தானாம். ஹீரோவாக கேரியர் மீண்டும் பிக்கப் ஆனதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான நானி என்ற நடிகரிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சமீபத்தில்கூட நானி நடிப்பில் வெளிவந்த வி படத்தில் வில்லன் கலந்த ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நச்சென்று இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் மேற்கூறிய நடிகர்கள் மாஸ்டர் படத்தை தவற விட்டது கொஞ்சம் வருத்தம் தான்.