திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விக்ரம் 61 படத்தை இயக்கும் ரஞ்சித்.. ஆனால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிடையாதாம்

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமிற்கு சமீபத்தில் எந்தவொரு புதிய படமோ அல்லது அறிவுப்புகளோ வெளியாகவில்லை. அவரை ரசிகர்கள் திரையில் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது விக்ரம் படங்கள் குறித்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது.

விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படமும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.

இதுதவிர மேலும் இரண்டு புதிய படங்களையும் விக்ரம் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். விக்ரமின் 61வது படமாக உருவாக உள்ள இப்படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத்தை இசையமைக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக பா.இரஞ்சித் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார். அவரது முதல் படமான அட்டக்கத்தி தொடங்கி இறுதியாக வெளியான சார்பட்டா பரம்பரை படம் வரை இவர் தான் இசையமைத்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விக்ரம் நடிக்கும் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

vikram-61
vikram-61

Trending News