விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மகான் எனும் படத்திலும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்து தற்போது இப்படமும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தற்போது அடுத்ததாக எந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என திட்டமிட்டு தற்போது விக்ரம் இளம் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. சாதாரண வெற்றி மட்டுமே பதிவு செய்து வருகின்றன. அதனால் தற்போது விக்ரம் இனி இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் கோமாளி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பிரதீப் ரங்கநாதன் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடியை மையமாக வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சமீப காலமாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் இப்படத்தில் கண்டிப்பாக விக்ரமின் காமெடிய பார்க்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

இப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகியுள்ள கோப்ரா, துருவ நட்சத்திரம் போன்ற படங்களை வெளியிடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் மேலும் இப்படத்தினை எப்போது வெளியீட்டு வசூலை வாரிக் குவிக்கலாம் என்பதில் விக்ரம் ஆர்வம் காட்டி வருவதாக கூறியுள்ளனர். மேலும் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிசில் எந்த வசூல் வெற்றியையும் பதிவும் செய்யவில்லை அதற்காகவே தற்போது விக்ரம் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி வருகின்றனர்.