புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுடன் இருக்க ஆசைப்படும் விக்ரம் பட நடிகை.. உலகநாயகன் மீது இப்படி ஒரு கிரஷா?

உலக நாயகன் கமல்ஹாசனின் மீது ஆசைப்படாத நடிகைகளை இல்லை. ஏனென்றால் அவருடைய அழகுக்கும், நடிப்புக்கும் அடிமையாக பல நடிகைகள் இருந்தனர். அதுமட்டுமின்றி இப்போதும் அவர் மீது காதலுடன் சிலர் உள்ளனர். கமல் மீது தீராத காதலில் இருந்த சிலர் அவருக்காக திருமணம் செய்து கொள்ளாமலே நெடுகாலம் இருந்து உள்ளனர்.

மேலும் கமலின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகைகள் ஏங்கியது உண்டு. அப்படி ஒரு நடிகை கமல் மீது உள்ள அன்பை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விக்ரம் படத்தில் நடித்த மீனாட்சி கோவிந்தராஜன் தான்.

Also Read: பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விட வசூல் வேட்டையில் உலக நாயகன்

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் இவர் பரிச்சயமானார். இதைத்தொடர்ந்து விக்ரமின் கோப்ரா, வேலன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டிமான்டி காலனி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மீனாட்சி கோவிந்தராஜன் கமல் என்றாலே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றும், ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மேலும் ஒரு நாள் முழுக்க அவருடன் இருக்க வேண்டும்.

Also Read: புளுகுரதுல இது வேற ரகம்.. அதுவும் அவங்க ஆவியுடன் பேசி நினைத்ததை சாதித்த எஸ் வி சேகர்

அதாவது ஒரு உதவியாளராக அவர் செய்யும் வேலை மற்றும் படத்திற்காக என்னென்ன செய்கிறார் என்பதை கூட இருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த வயதிலும் கமல் அவ்வளவு எனர்ஜியுடன் உள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் நிறைய உழைப்பை போடுகிறார்.

இப்படிப்பட்ட மனிதனின் ஒரு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என மீனாட்சி கோவிந்தராஜன் ஆசைப்பட்டு உள்ளார். மேலும் கமல் மீது அப்போதிலிருந்து அவருக்கு கிரஷ் உள்ளதாம். கமலின் பார்வை இவர் மீது விழுந்து இவரின் ஆசையும் நடைபெறும் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read:வெறும் 35 நாட்களில் கமல் செய்யப் போகும் ராஜதந்திரம்.. பெத்த லாபத்துக்கு விரித்த மொத்த வலை

Trending News