திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமிழ் சினிமாவை உற்று பார்க்க வைத்த 2 படங்கள்.. பொறாமையில் KGF, சீதாராமை வைத்து பண்ணும் அரசியல்

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ரிலீசான படங்கள் எல்லாமே எதிர்பார்த்த அளவு கல்லாக்கட்டி விட்டன. அதிலும் முக்கியமான நான்கு படங்கள் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களாலும் ரசிக்கும்படி அமைந்து விட்டது.

அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் மூவிகள் தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டன என்றே சொல்லலாம். ஹாலிவுட், பாலிவுட், மோலிவுட், டோலிவுட் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை உற்று நோக்க ஆரம்பித்து விட்டன.

Also Read: KGF இயக்குனரின் அடுத்த படம் இந்த டாப் ஹீரோவுடன் தான்.. அதிரடி அறிவிப்பால் அதிரி புதிரி பண்ணும் ரசிகர்கள்

என்னதான் தமிழ் சினிமாவை பாராட்டும் விதமாக பேசினாலும், ஒரு பக்கம் பொறாமையும் இருக்கதான் செய்கிறது. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை பொருத்து கொள்ள முடியாமல் சிலர் KGF மற்றும் சீதாராம் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலக்சனை வைத்தே அரசியல் செய்கிறார்கள்.

மற்ற இந்தியமொழி திரைப்பட உலகங்கள் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க தவித்து கொண்டிருக்கும் போது தமிழ் சினிமா கோடிக்கணக்கில் வசூல் ஈட்டி வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இது மற்ற திரைத்துறையினருக்கு சற்று எரிச்சலையே கிளப்பி இருக்கிறது. மற்ற மொழி சினிமா ரசிகர்களும் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களை கொண்டாடி வருகின்றனர்.

Also Read: இப்பவும் வசூல் வேட்டையாடும் விக்ரம்.. உலகம் முழுவதும் இத்தனை கோடியா ?

சிம்புவின் வெந்து தணிந்தது காடு, தனுஷின் திருச்சிற்றம்பலம், கமலின் விக்ரம், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் இந்த ஆண்டு கோலிவுட் சினிமாவின் மைல்கல்கள் என்று சொல்லலாம். வெந்து தணிந்தது காடு, திருச்சிற்றம்பலம் படங்கள் எதிர்பாராத வெற்றியை கொடுத்து இருக்கின்றன.

கமலஹாசனின் விக்ரம் படம் ஒட்டுமொத்த சினிமா உலகையும் முதன்முறையாக தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம். விக்ரம் படம் 400 கோடி வசூல் செய்தது. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் ரிலீசான இரண்டு வாரங்களிலேயே 400 கோடி வசூலை எட்டி விட்டது.

Also Read: 10 நாட்களில் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்.. 2ம் பாகத்தை கண்டு நடுங்கும் திரையுலகம்

Trending News