திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த விவேக்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சீயான் விக்ரமுக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுக்கும் என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று.

சமூகம் சார்ந்த கருத்துக்களை தன்னுடைய காமெடி வாயிலாக சொல்வதில் கில்லாடி விவேக். தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனை தவிர மற்ற அனைத்து நடிகர் நடிகைகளுடன் நடித்து விட்டார்.

இந்தியன் 2 படத்தில் கூட அதற்கு சாத்தியம் இருந்த நிலையில் படப்பிடிப்புகள் நடக்காமல் தள்ளிப்போனது கடைசிவரை விவேக்கின் கனவை கனவாகவே மாற்றிவிட்டது. கமலுடன் நடிக்க வேண்டும் என்பது விவேக்கின் நீண்டநாள் விருப்பம்.

அதேபோல் தமிழ் சினிமாவில் விவேக்கிற்கு நெருங்கிய நண்பர் என்றால் அது சீயான் விக்ரம் தான். சினிமாவில் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனக்கு விவேக் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார் என விக்ரம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் அவரது உடலைப் பார்க்க விக்ரம் வந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் இன்று தான் விக்ரமுக்கு பிறந்தநாளும் கூட.

தன்னுடைய பிறந்த நாளில் உயிர் நண்பனின் இரங்கல் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது எனும் அளவுக்கு இந்த செய்தி பலரது மனதையும் பாதித்துள்ளது.

vivek-vikram-cinemapettai
vivek-vikram-cinemapettai

Trending News