திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விக்ரம் மீது கொலவெறியில் பாலா.. நாளுக்கு நாள் வழுக்கும் மகன் பட பஞ்சாயத்து

ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகர் என ஓரம் கட்டப்பட்ட விக்ரமை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுக்கிறேன் பார் என்று சொல்லி அடித்தார் பாலா. சேது படம் இல்லை என்றால் விக்ரம் சினிமாவிலேயே இருந்திருக்க முடியாது. அப்படி நகமும் சதையுமாக இருந்த பாலா விக்ரம் இருவரும் இப்போது முட்டிக்கொண்டும் மோதிக் கொண்டும் கிடக்கிறார்களாம்.

தன்னை அறிமுகப்படுத்திய என்னுடைய குருநாதர் தான் என் பையனையும் அறிமுகப்படுத்த வேண்டும் என விக்ரம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை பாலாவை இயக்க சொன்னார்.

அவரும் வர்மா என்ற பெயரில் ஒரு கொடூரமான படத்தை எடுத்துக் கொடுத்தார். படம் விக்ரமுக்கு பிடிக்காததால் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது. இதனால் பாலா இனி துருவ் விக்ரம் படத்தை இயக்கப் போவதில்லை என கூறி விட்டு விலகினார்.

அதன் பிறகு விக்ரம் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் படத்தை ஆரம்பித்தார். படமும் வெளியாகி பிளாப் ஆனது. அதைத் தொடர்ந்து நேரடியாக ஓடிடியில் பாலா இயக்கிய வர்மா படமும் வெளியாகி பாலாவுக்கு இருந்த நல்ல பெயர் அனைத்தும் வீணாப்போனது.

இந்த பஞ்சாயத்து காரணமாக இருவருக்குள்ளும் ஏகப்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகன் கேரியரை வேண்டுமென்றே பாலா நாசம் செய்து விட்டார் என்பது போல விக்ரம் வாய் விட்டு விட்டாராம். மேலும் தன்னை சந்திக்க வரும் அனைவரிடமும் விக்ரம் தொடர்ந்து இதைச் சொல்லிக் கொண்டிருக்க பாலாவுக்கு வந்ததாம் கோபம்.

vikram-bala-cinemapettai
vikram-bala-cinemapettai

பாலா சும்மாவே நல்ல முறையாக தான் பேசுவார், இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாரா. கோலிவுட் வட்டாரங்களில் விக்ரமை லெப்ட் ரைட் வாங்கி கொண்டிருக்கிறாராம். பாவம் துருவ் விக்ரம், இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அப்பாவா, மாமாவா என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

Trending News