திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாகுபலி 2 வசூலை முறியடித்த விக்ரம்.. திரையரங்கையே அதிர வைத்த சம்பவம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் திரையரங்குகளில் தற்போது வரை சக்கைபோடு போட்டு வருகிறது. இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை பார்க்கவில்லை என ரசிகர்கள் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த அனைத்து படங்களின் வசூலையும் விக்ரம் படம் முறியடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக பாகுபலி-2 இருந்தது. தற்போது விக்ரம் படம் தமிழ்நாட்டில் மட்டும் 162 கோடி வசூல் செய்து பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கேரளாவில் விக்ரம் படம் 35 கோடி வசூல் செய்து டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. மேலும் தெலுங்கில் 30 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரம் படம் வெளியான எல்லா இடங்களிலுமே அதிரிபுதிரி ஹிட் ஆகியுள்ளது. மேலும் விக்ரம் படம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

விக்ரம் படம் 125 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை உலகம் முழுவதும் 375 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ளது. விக்ரம் படத்தை திரையிட்ட அனைத்து பேருக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது.

விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளமாக மீண்டும் வந்து நிற்கிறார் உலகநாயகன் கமலஹாசன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அவரின் படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் தரமான கம்பேக் கொடுத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் இப்படத்தை பற்றிய உதயநிதி பேசுகையில் இன்னும் ஐந்து, ஆறு வாரங்களுக்கு விக்ரம் படத்தின் டிக்கெட்டுகள் ஹவுஸ்புல்லாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் கண்டிப்பாக விக்ரம் படத்தின் வசூல் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News