ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கௌதம் மேனனுக்கு மீண்டும் கால்ஷிட் கொடுத்த விக்ரம்.. இந்த வாட்டியாது மிஸ் பண்ணாம பாத்துக்கோங்க

கோலிவுட்டில் ஒரு படத்திற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து நடிக்கும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். தன் உடலை வருத்தி அந்த கேரக்டருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். இதற்கு நடிப்பின் மீது இருக்கும் எல்லையற்ற காதல் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. விக்ரம் போன்ற ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் சமீபத்தில் விக்ரம் படம் எதுவுமே வரவில்லை. இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கடாரம் கொண்டான் படமும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்ரம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது விக்ரம் மகான், கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் மகான் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விக்ரம் மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் படம் தான் துருவ நட்சத்திரம். இப்படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி உள்ளதாம். எனவே ஒரு சில நாட்களில் கோப்ரா படத்தை முடித்து விட்டு தொடர்ந்து 15 நாட்கள் இயக்குனர் கெளதம் மேனனுக்கு கால்ஷீட் ஒதுக்க நடிகர் விக்ரம் முடிவு செய்துள்ளாராம்.

இயக்குனர் கெளதம் மேனன் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் மட்டுமே துருவநட்சத்திரம் படத்தை முடிக்க முடியும். இந்த வாய்ப்பை நழுவ விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு நடிகர் விக்ரமின் கால்ஷீட் கிடைக்காதாம். ஏனெனில் விக்ரம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளாராம். எனவே கெளதம் மேனன் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் மட்டுமே படத்தை முடித்து வெளியிட முடியும்

Trending News