திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷுக்காக இறங்கி வந்த விக்ரம்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் சீயான் 62

Actor Vikram: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வந்த தங்கலான் பட சூட்டிங் தற்போது முடிவடைந்து இருக்கிறது. இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கடின உழைப்பை கொடுத்து வந்த விக்ரம் தற்போது தன்னுடைய கெட்டப்பை மாற்றி அடுத்த கட்ட அவதாரத்திற்கு தயாராகி விட்டார்.

தற்போது அவர் ஸ்டைலான லுக்கில் இருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அவருடைய 62 ஆவது படம் பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இது நிச்சயம் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் தான்.

Also read: சம்பவத்திற்கு தயாரான விக்ரம், பா ரஞ்சித்.. கமலுக்கு கொடுக்கப் போகும் டஃப்

அந்த வகையில் விக்ரமின் கோப்ரா படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தான் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். தற்போது லியோ படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இவர் மீண்டும் விக்ரமுடன் கைகோர்த்துள்ளார்.

இதில் மற்றொரு சர்ப்ரைஸும் இருக்கிறது. அதாவது இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவியாளர் மகேஷ் பாலசுப்பிரமணியம் தான் இயக்குகிறார். ஆனால் இப்படத்திற்கான கதையை லோகேஷ் தான் எழுதுகிறார். இதன் காரணமாகவே விக்ரம் தற்போது இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

Also read: போண்டாமணியையும், போனிகபூரையும் மறந்துவிட்ட லோகேஷ்.. லியோ படத்தை கலாய்த்து தள்ளும் பிரபலம்

ஏனென்றால் இப்போது அதிக டிமாண்ட் இருக்கும் இயக்குனர் யார் என்று கேட்டால் அது லோகேஷ் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதனாலேயே பல பெரிய நடிகர்கள் இவருக்காக காத்திருக்கும் நிலையும் இருக்கிறது. அந்த வகையில் புதுமுக இயக்குனராக இருந்தாலும் லோகேஷ் கதை என்பதால் தான் விக்ரம் இறங்கி வந்திருக்கிறார்.

இவ்வாறாக உருவாகி இருக்கும் இந்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. மேலும் இந்த செய்தி லியோ படத்தில் விக்ரமும் ஒரு கேமியோ ரோலில் இருப்பாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இப்போது ஒட்டுமொத்த நடிகர்களும் லியோவில் தான் சங்கமித்திருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் இது செம ட்ரீட்டான செய்தி தான்.

Also read: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லோகேஷ்.. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை உடைத்த மிஷ்கின்

 

Trending News