3 வருட போராட்டம், அடிமேல் அடி வாங்கும் விக்ரம்.. கோப்ரா படக்குழு செய்த 5 சொதப்பல்கள்

பல வருடம் காத்திருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியான விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம். 2 மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால் வெளியிடும் தேதி மட்டும் மாற்றிக் கொண்டே வந்தனர். கடைசியாக படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்தனர் படக்குழுவினர்.

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான கோப்ரா திரைப்படம் உற்சாக வரவேற்பில் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படத்தின் திரைக்கதை இல்லை என்ற ஒரு சில கருத்துக்களும் வெளிவருகின்றன. ஆனால் நம்புற மாதிரி இல்லை காரணம் படத்தின் பிரம்மாண்டம் அப்படி இருக்கிறது. இருந்தாலும் விக்ரம் நடிப்பிற்காக சென்று விடலாம் என்ற ஒரு விஷயத்திற்காக இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

Also read: விக்ரம் செய்த அநியாயம்.. கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கிய விசுவாசிகள்

படத்தில் முக்கியமானதாக கருதப்படுபவை முதலில் விக்ரமின் நடிப்பு மட்டுமே. அடுத்து கதைக்களம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது கணிதம் சம்பந்தமான விஷயங்கள், அறிவியல் சம்பந்தமான விஷயங்கள் மற்றும் காட்சி அமைக்கப்பட்ட விதங்கள் பாராட்டத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குநரின் கைவண்ணம் அழகாக தெரிகிறது.

கோப்ரா படத்தை பார்க்க முடியாதபடி செய்த சில காரணங்கள் படத்தின் இயக்கம், முக்கியமாக கருதப்படும் திரைக்கதையை இயக்குனர் அவர்கள் சொதப்பி விட்டார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாதி மிகவும் தொய்வு அதனாலேயே படத்தின் மிக பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. கோப்ரா படம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடி எடுக்கப்பட்டுள்ளது, படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. விநாயகர் சதுர்த்தி என்பதால் 5 நாள் கலெக்ஷனை அள்ளி விடலாம் என்ற பிளானில் இறக்கி விட்டது மிகப் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

Also read: ஏஆர் ரஹ்மானால் வருத்தத்தில் இருக்கும் விக்ரம்.. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்க!

மொத்தத்தில் விக்ரம் நடித்து பரபரப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தை எதிர்பார்த்து திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது உறுதியாகிறது. இது படக்குழுவினருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

வலிமை படமும் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டு எடுத்து தான் நினைத்ததை செய்ய முடியாமல் வேறு வழியின்றி காட்சிகளை அமைத்தேன் என்று H. வினோத் கூறினார். அதனால் படம் பல சொதப்பல்கள் இடம்பெற்றன என்று கூறினார். அதேபோல் இந்த படமும் கொரோனா காலகட்டத்தில் எடுக்க நினைத்த காட்சிகளை காலதாமதம் ஏற்பட்டதால் செயல்படுத்தாமல் படத்தை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை வெளியிட்டு அதனால் பல சொதப்பல்கள் தெரிகிறது.

ஆனால் இரண்டு இயக்குனர்களும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். 3 வருட போராட்டத்திற்கு பின் கோப்ரா படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விக்ரம் பல தோல்விகளை கொடுத்து வந்த வேளையில் மிகவும் நம்பி இருந்த இந்த திரைப்படம் விக்ரமிற்கு மிகவும் மரண அடியாக விழுந்தது. இதிலிருந்து இவர் மீண்டுவர எப்படி முயற்சி செய்து அடுத்த படத்தை கொடுப்பார் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. நல்ல நடிகர் நல்ல படம் கொடுக்க முடியாமல் தவிப்பது கோலிவுட் வட்டாரத்திலும் சரி ரசிகர் மத்தியிலும் சரி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத விக்ரம்.. நீங்க சொல்ற சாக்கு ஏதும் நம்புற மாதிரி இல்ல