வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

துருவ நட்சத்திரம் பார்க்க கௌதம் மேனன் கூறும் 3 முக்கிய விஷயங்கள்.. பல வருட எதிர்பார்ப்பு புது ஸ்டைலில் வரும் விக்ரம்

Actor vikram and Gautham Menon: விக்ரம் என்ற பெயருக்கு போராளி என்று சொன்னால் கூட பொருந்தும். ஏனென்றால் திரையுலகில் விக்ரம் என்ற பெயர் அங்கீகரிக்கப் படுவதற்காகவே அவர் பல வருடங்களாக தத்தளித்து இருக்கிறார். அதன் பிறகு இவருக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து பல படங்களில் வெற்றியை கொடுத்து முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

ஆனால் என்னமோ தற்போது சூழலுக்கு ஏற்ற மாதிரி இவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் சமீப காலமாக இவரது படங்கள் ரசிகர்கள் முன்னாடி தோற்று தான் போய் நிற்கிறது. அதனாலேயே ஒவ்வொரு படத்திலும் விடாமுயற்சியுடன் நடித்து வருகிறார். கடைசியாக இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு நல்ல காலம் பிறந்து விட்டது.

Also read: விக்ரம், வாரிசை ஓரம் கட்டிய லியோ.. வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா?

அதாவது இவர் நடித்து வைத்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் நான்கு வருட காலமாக வெளியிடாமல் வைத்திருக்கிறார். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். தற்போது இப்படம் அனைத்தும் முடிந்து வெளியிடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. இதற்கிடையில் இவ்வளவு வருடமாக இப்படம் இருந்ததால் திரையரங்கில் வெளியிட்டால் கண்டிப்பாக நஷ்டம் அடையும் என்று சில பிரபலங்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு எதிர் மாறாக இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன் இப்படத்தை பார்ப்பதற்கு கௌதம் மூன்று முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறார். அதாவது இப்படம் இரண்டே கால் மணி நேரம் மட்டுமே. மேலும் நான்கு வருட பழைய படமாக இருந்தாலும் தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு மிகவும் ஸ்டைலிஷ் ஆக படம் அமைந்திருக்கும்.

Also read: கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

இதுவரை கௌதம் எடுத்த படங்களிலே இப்படத்தில் அதிகபட்ச ஸ்டைலிசை பயன்படுத்தி இருக்கிறார். அடுத்து முக்கியமாக இப்படத்தில் ஹீரோ விக்ரமை விட வில்லனுக்கு அதிக வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதிலும் இயக்குனர், அந்த வில்லன் யார் என்று சொல்லாமல் மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்.

வில்லன் யார் என்று படம் பார்க்கும்போது மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அந்த அளவிற்கு முக்கியமான வில்லனை இறக்கி இருக்கிறார். அதனால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று ஆணித்தரமாக இயக்குனர் கூறியிருக்கிறார். அதனால் விக்ரமுக்கு தங்கலான் படத்திற்கு முன்பு கண்டிப்பாக இந்த படம் வெற்றி அடையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Also read: இளவட்ட வயசில் துருவ் செய்யும் மட்டமான வேலை.. உச்சகட்ட கவலையில் இருக்கும் விக்ரம்

Trending News