Madhagajaraja: இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான், நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை உட்பட பல படங்கள் வெளியானது. ஆனால் அந்த ரேஸில் மதகஜராஜா தான் ஜெயித்துள்ளது.
இத்தனைக்கும் இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கடந்து விட்டது. இத்தனை வருடங்களாக கிடப்பில் இருந்த படத்தை ஒரு வழியாக பட குழு தூசி தட்டி ரிலீஸ் செய்து விட்டது.
ஆனால் இவ்வளவு வருடங்கள் கழித்து வெளியாகும் படத்திற்கு வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது .அதை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் தற்போது படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் விஷால் சந்தானம் கூட்டணி தான். அதிலும் சுந்தர் சி யின் வழக்கமான காமெடி இந்த படத்திலும் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
ரிலீசுக்கு தயாராகும் துருவ நட்சத்திரம்
அதன் விளைவாக இந்த வருடம் பல படங்களை தூசி தட்டி வெளியிடும் முடிவில் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். அதன் முதல் கட்டமாக துருவ நட்சத்திரம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் எப்போதோ வெளிவர வேண்டிய படம் பல பிரச்சனைகளால் முடங்கியது. அப்படத்தை தற்போது ரிலீஸ் செய்யும் முயற்சியில் பட குழு இறங்கி உள்ளது.
ஜனவரி 26க்கு பிறகு இதன் வேலைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி சந்தானம் நடிப்பில் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம் தான் சர்வர் சுந்தரம்.
அதேபோல் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் நடிப்பில் 10 வருடங்களாக கிடப்பில் இருக்கும் படம் தான் இடம் பொருள் ஏவல். இந்த படங்களுடன் இன்னும் முக்கிய படங்களும் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கான வேலைகளை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர். ஆக மொத்தம் மதகஜராஜாவின் வெற்றி தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.