திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

20 வருடங்களுக்குப் பின் விக்ரம் செய்யும் அதே கதாபாத்திரம்.. தங்கலான் படத்தின் உண்மையை உளறிய சியான்

தங்கலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் தனது பாணியில் கலகலப்பாக பேசினார். இந்த படத்தைப் பற்றிய பல உண்மைகளை உளறி கொட்டி விட்டார். இந்த படத்தில் தன் கதாபாத்திரத்தையும் என்ன என்பதை பற்றியும், கதை பற்றியும் வெளிப்படையாகவே பேசினார்.

விக்ரம் தான் இருபது வருடத்துக்கு முன்னர் பண்ணிய கதாபாத்திரத்தில் மீண்டும் இந்த படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்தார். கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மேக்கப்போடு தான் இருந்தாராம். உடை என்று பார்த்தால் கோமணம் மட்டும்தான். இவரை போலவே 50 பேர் அதே மேக்கப்பில் இருந்தார்களாம்.

தங்கலான்படத்திற்கு 50 மேக்கப் ஆர்டிஸ்ட் வேலை செய்ததாக கூறியுள்ளார். இவர்களுக்காகவே இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித்தும் கோமணத்துடன் தான் இருந்தாராம். பல அவார்டுகளை இந்த படம் வாங்கி குவிக்கும் என்று ஆணித்தனமாக அடித்துக் கூறுகிறார் விக்ரம்.

20 வருடங்களுக்கு முன்னர் விக்ரம் நடித்த படம் பிதாமகன். இந்த படம் இயக்குனர் பாலா ஸ்டைலில் தனித்துவமாக வெளிவந்து மக்கள் மனதில் இடம் பிடித்தது. படம் வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக இந்த படத்தில் நடித்த விக்ரம் மற்றும் சூர்யாவிற்கு நல்ல பெயர் பெற்று தந்தது.

விக்ரமிற்கு பிதாமகன் படத்தில் எந்த ஒரு வசனமும் கிடையாது. முழுக்க முழுக்க சுடுகாட்டில் வளர்ந்ததால் அவருக்கு பேச வராதது போல் காட்டி இருப்பார் இயக்குனர் பாலா. இதே போல் தங்கலான் படத்திலும் அவருக்கு எந்த ஒரு வசனமும் கிடையாதாம். பிதாமகன் படத்தை போலவே இந்த படமும் ஒரு உணர்ச்சியை தூண்டும் படமாக இருக்கும் என்கிறார்.

இப்பொழுது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் படத்தில் விக்ரமுக்கு 22 கோடிகள் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் முன்னர் தங்கலான் படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் விக்ரம் ரேஞ்ச் வேற லெவலில் மாறி உள்ளது.

Trending News